Automobile Tamilan

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான அரிய வகை காந்தத்தை இந்தியாவுக்கு வழங்க சீனா அனுமதி.?

chetak 3503

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான அரிய வகை காந்தம், உரம் உட்பட அரிய மண் தாதுக்கள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கான தடையை நீக்க உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

தி எக்னாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில்,  அவர் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் முக்கியமான பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என்று கூறப்படுகின்றது.

விவாதங்களை நன்கு அறிந்த வட்டாரங்களின்படி, பெய்ஜிங் உர ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது மட்டுமல்லாமல், அரிய மண் காந்தங்கள், தாதுக்கள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை இந்தியாவிற்கு அனுப்ப அனுமதிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சீனா இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தியாவிற்கு சிறப்பு உரங்களை, அரிய மண் தாதுக்கள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை அனுப்புவதை நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள், எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் உட்பட பெரும்பாலான தொழிற்துறைகள் மிக கடும் பாதிப்பினை சந்தித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பு மூலம் மீண்டும் இந்தியாவிற்கு ஏற்றுமதியை அனுமதிக்கும் பட்சத்தில் மின் வாகன உற்பத்தி வழக்கம் போல நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version