வால்வோ ஐஷர் வர்த்தக வாகனங்கள் பிரிவின் கீழ் செயல்படுகின்ற ஐஷர் டிரக்ஸ் மற்றும் பஸ் நிறுவனத்தின் பாக்கத் ஆலையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட 50,000வது ஐஷர் ஸ்கைலைன் Pro E மின்சாரப் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
ஐஷர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வினோத் அகர்வால், எம்டி & சிஇஓ, கூறுகையில் “VECV அனைத்து பிரிவுகளிலும் சிறந்த தயாரிப்புகளை வழங்குவதுடன் மற்றும் அனைத்து ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு இணங்கக்கூடிய குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன் வளைவை விட தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்த மைல்கல், இந்திய பேருந்துத் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்பை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, மத்தியப் பிரதேசத்தின் பாக்காட்டில் 43 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை, டீசல், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் டிரைவ்லைன் என மூன்று விதமான பவர்டிரையினிலும் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இலகுரக, நடுத்தர மற்றும் கனரக வகைகள் உட்பட பல்வேறு வகையான பேருந்துகளை உற்பத்தி செய்கிறது.
இந்த ஆலையில் தயாரிக்கப்படுகின்ற பேருந்துகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்ற பள்ளி, பணியாளர்கள், பர்மீட் வாகனங்கள், நகரங்களுக்கு இடையேயான மற்றும் சுற்றுலாப் பிரிவுகளுக்கு ஏற்ற சேவைக்கான தேவைகளை பூர்த்தி செய்கின்றது.
எதிர்காலத்திற்கான திட்டங்களை பற்றி ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகள் நிறுவனம் மின்சார வாகன மட்டும்மலாமல் CNG, LNG மற்றும் HCNG (ஹைட்ரஜன் சிஎன்ஜி) போன்ற மாற்று எரிபொருள் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளதாகவும் தனது அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…