Automobile Tamilan

ஜிஎம் ஆலையை கைப்பற்றும் கிரேட் வால் மோட்டார்ஸ் இந்தியா

gwm india

சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் (Great Wall Motors) நிறுவனம், தனது ஹவால் மற்றும் ஓரா எலக்ட்ரிக் கார் பிராண்டை இந்தியாவில் தயாரிக்க ஜிஎம் தலேகோன் ஆலையை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் தனது கார் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது. அதன்பிறகு, குஜராத் மாநிலத்தில் அமைந்திருந்த ஆலையை எம்ஜி மோட்டார் வாங்கிய நிலையில், அடுத்ததாக புனே அருகாமையில் அமைந்திருந்த தலேகோன் ஆலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்த ஆலையை ஜிஎம் பயன்படுத்தி வந்த நிலையில், இந்த ஆலையை விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது.

நேற்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், தலேகான் வசதியை உள்ளடக்கிய ஜிஎம் இந்திய மற்றும் ஜி.டபிள்யூ.எம் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தில், இந்த பரிவர்த்தனை இந்தியாவில் நுழைந்து முதலீடு செய்வதற்கான நிறுவனத்தின் திட்டத்தை உறுதிப்படுத்தும் என்று ஜி.டபிள்யூ.எம் குளோபல் ஸ்ட்ராடஜி துணைத் தலைவர் லியு சியாங்ஷாங் தெரிவித்துள்ளார். “இந்திய சந்தையில் ஏற்பட உள்ள விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் நல்ல முதலீட்டு சூழல் உள்ளது. இந்திய சந்தையில் நுழைவது கிரேட் வால் மோட்டார்ஸின் உலகளாவிய மூலோபாயத்திற்கான ஒரு முக்கியமான படியாகும், ”என்று லியு கூறினார்.

மேலும், கிரேட் வால் மோட்டார்ஸின் புதிய முதலீடு அதிக வேலைகளை உருவாக்கும், (நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு ஒரே மாதிரியாக) வாகனத் துறையில் திறன் அளவை மேலும் மேம்படுத்துகிறது; உள்ளூர் விநியோக சங்கிலி, ஆர் & டி மற்றும் தொடர்புடைய தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல்; மேலும் இந்திய அரசாங்கத்திற்கும் மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கும் அதிக லாபம் மற்றும் வரிகளை வழங்குதலை நோக்கமாக கொண்டிருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஆட்டோ எக்ஸ்போவில் தனது ஹவால் எஸ்யூவி பிராண்டு மற்றும் ஓரா எலக்ட்ரிக் கார் பிராண்டினை அறிமுகம் செய்ய உள்ளது.

 

Exit mobile version