இந்தியாவில் நடைமுறையில் உள்ள வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 % மற்றும் கூடுதலாக செஸ் வரி 1% முதல் அதிகபட்சமாக 22% வரை வாகனத்தின் வகையை பொறுத்து மாறுபடக்கூடும். எனவே, இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1200ccக்கு குறைந்த திறன் கொண்ட கார்களுக்கு வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நமது 79வது சுதந்திர தினத்தில் திரு.நரேந்திர மோடி அவர்களால் வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வரக்கூடும் என குறிப்பிட்டார்.
GST cut
1,200 சிசிக்குக் குறைவான கார்கள் மற்றும் 350 சிசிக்குக் குறைவான இரு சக்கர வாகனங்களுக்கு வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாற்றம் தீபாவளி பண்டிகைக்கு முன்னராக நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.
குறிப்பாக 350cc க்கு குறைந்த திறன் பெற்ற இரு சக்கர வாகனங்களுக்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள 28 % ஜிஎஸ்டி வரி அனேகமாக 18% ஆக குறைக்ககப்படலாம், கூடுதலாக 1200cc க்கு குறைந்த திறன் கொண்ட எஞ்சின் உள்ள கார்களின் வரி குறைக்கப்படுவதுடன், பிரீமியம் கார்களுக்கு தற்பொழுது உள்ள 50 % கூடுதலான ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரி உட்பட நடைமுறையில் உள்ளதால், இதனை 40 % ஆக கட்டுப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வரும் வாரத்தில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எட்டப்படும் என