Automobile Tamilan

நைட்ஸ்டெர் 440 க்ரூஸைரை வெளியிடும் ஹார்லி-டேவிட்சன்

நைட்ஸ்டர் 440
Harley davidson Nightster 975

செப்டம்பரில் ஹீரோ மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் 440cc எஞ்சின் பெற்ற க்ரூஸர் ஸ்டைலை பெற்ற நைட்ஸ்டெர் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இரு நிறுவன கூட்டணியில் எக்ஸ்440 மற்றும் மேவ்ரிக் 440 வெளியிடப்பட்ட நிலையில், தற்காலிகமாக மேவ்ரிக் சில மாதங்களாக சந்தையில் கிடைக்கவில்லை.

ஏற்கனவே, இந்த கூட்டணியில் வெளியிடப்பட்ட எக்ஸ்440 ஓரளவு வரவேற்பினை பெற்றிருக்கின்றது. ஆனால் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் கூட்டத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் க்ரூஸ் கண்டரோல் வசதியுடன் 125சிசி கிளாமர் உட்பட மற்றொரு புதிய 125 சிசி மாடல் ஆகியவற்றுடன் மேம்பட்ட புதிய மாடல்களை வெளியிட உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் இந்த கூட்டத்தில் இந்நிறுவனங்களின் கூட்டணியில் மூன்றாவது மாடலை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நெட்ஸ்டெர் 440 என்ற பெயரை காப்புரிமை பெற்று வைத்துள்ளதால் அனேகமாக இந்த க்ரூஸரை வெளியிடக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

2020 ஆம் ஆண்டு முதல் ஹீரோ-ஹார்லி கூட்டணி இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கதாகும்.

Exit mobile version