Skip to content

ஜூலை 1 முதல்., பைக், ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப்

2024 hero splendor+ xtec 2.0 gets 3 colours

தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் காரணமாக ரூ.1,500 வரை பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலை உயர்த்துவதாக ஹீரோ மோட்டோகார்ப் அதிகார்ப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், உற்பத்தி மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பால், குறிப்பிட்ட சில மாடல்கள் ஜூலை 1, 2024 முதல் ரூ.1,500 வரை அதிகபட்சமாக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த மாடல்கள் என்பதனை அறிவிக்கவில்லை.

சமீபத்தில் ஹீரோ ஜூம் மாடலில் சிறப்பு காம்பேட் எடிசனை வெளியிட்டிருந்த நிலையில், அடுத்த சில நாட்களில் ஹீரோ டெஸ்டினி 125 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதை நாம் ஏற்கனவே உறுதி செய்திருந்தோம்.