Automobile Tamilan

தமிழகத்தில் ரூ.7000 கோடிக்கு முதலீடு – ஹூண்டாய்

இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரமாக விளங்கும் சென்னையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஹூண்டாய் கார் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க ரூ.7,000 கோடி முதலீட்டை மேற்கொள்ள உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் எலக்ட்ரிக்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயனிகள் வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் , சென்னை அருகே அமைந்துள்ள திருபெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை என இரு இடங்களில் தொழிற்சாலையை கொண்டுள்ளது.

தற்போது வளர்ந்து வரும் எலக்ட்ரிக் கார் சந்தையை தனது இலக்காக கொண்டு சுமார் ரூ.7000 கோடி முதலீட்டை  மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக புதிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு பனிகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக 1500 புதிய வேலை வாய்ப்பு நேரடியாக உருவாக்கப்பட உள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், வருகிற ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சென்னையில் நடக்கும் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் நடைபெற உள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார் உற்பத்தியை மஹிந்திரா, டாடா மற்றும் மாருதி நிறுவனங்கள் தீவரப்படுத்தியுள்ள நிலையில், ஹூண்டாய் நிறுவனமும் இதற்கான முதலீட்டை மேற்கொள்ள உள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் மாடலாக கோனா எஸ்யூவி மாடலை இந்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

Exit mobile version