
இந்தியாவின் முன்னணி மின் வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம் தனது பயணிகள் வாகனங்களுக்கான பிரத்தியேகமான அதிவிரைவு 180 kW டூயல்-கன் சார்ஜர்களை Charge_IN என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது, முதற்கட்டமாக இரு நிலையங்களை துவங்கியுள்ளது.
மஹிந்திரா தனது முதல் இரண்டு Charge_IN நிலையங்களை முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் கொண்டு வந்துள்ளது. முதல் நிலையம் ஹோஸ்கோட் அருகே பெங்களூரு – சென்னை நெடுஞ்சாலை (NH 75) வழித்தடத்தில் உள்ளது. முர்தல் நிலையம் டெல்லி – சண்டிகர் நெடுஞ்சாலை (NH 44) வழித்தடத்தில் டெல்லிக்கு அருகில் உள்ளது.
ஒவ்வொரு சார்ஜ்_IN நிலையத்திலும் இரண்டு 180kW வரைவு சார்ஜர்கள் உள்ளதால், இதன் மூலம் ஒரே நேரத்தில் நான்கு மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்ய முடியும்.
இந்நிறுவனத்தின் புதிய EV மாடல்களான XEV 9e, BE 6 மற்றும் வரவிருக்கும் XEV 9S போன்ற மாடல்களை 20% முதல் 80% வரை வெறும் 20 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் திறனை 180 kW சார்ஜர்கள் பெற்றுள்ளது. மஹிந்திரா தனது நெட்வொர்க்கை மற்ற பிராண்டின் EV பயனர்களும் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், சார்ஜ்_IN மூலம் 2027 இறுதிக்குள் 250 நிலையங்களை துவங்கவும், 1,000-க்கும் மேற்பட்ட சார்ஜிங் மையங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.