இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி தனது பிரபலமான கிராண்ட் விட்டாரா காரில் எரிபொருள் இருப்பினை மிக துல்லியமாக கிளஸ்ட்டரில் வழங்காத கார்களை திரும்ப அழைக்க உள்ளது.
டிசம்பர் 9, 2024 முதல் ஏப்ரல் 29, 2025 வரை தயாரிக்கப்பட்ட 39,506 கிராண்ட் விட்டாரா கார்களை திரும்பப் பெறுவதாக இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வாகனங்களில் சிலவற்றில் உள்ள ஸ்பீடோமீட்டர் அசெம்பிளியில் உள்ள எரிபொருள் இருப்பினை காட்டுவதற்கான, எச்சரிக்கை விளக்கு, எரிபொருள் நிலையை துல்லியமாக பிரதிபலிக்காமல் போகலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள், மாருதி சுசூகியின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் இருந்து, குறைபாடுள்ள பாகத்தை ஆய்வு செய்து இலவசமாக மாற்றித் தர உள்ளனர்.

