இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற ஃபிரான்க்ஸ் எஸ்யூவி இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், 2023 முதல் தற்பொழுது வரை கடந்த 28 மாதங்களில் சுமார் 5,00,000 கூடுதலான உற்பத்தி செய்துள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஜப்பானில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபிரான்க்ஸின் விற்பனை எண்ணிக்கை மிக விரைவாக 1,00,000 கூடுதலாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் மட்டுமல்லாமல், லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
இது 2024-25 நிதியாண்டில் அதிக ஏற்றுமதி செய்யப்பட்ட காராக உருவெடுத்தது மற்றும் அதே காலகட்டத்தில் உள்நாட்டு சந்தையில் அதிகம் விற்பனையாகும் முதல் 10 கார்களில் இடம்பிடித்தது.
சில முக்கிய குறிப்புகள்.,
- அறிமுகப்படுத்தப்பட்ட 10 மாதங்களில் மிக வேகமாக 1 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டியது.
- 2 லட்சம் மற்றும் 3 லட்சம் விற்பனை மைல்கல்லை மிக வேகமாக எட்டியது.
- பிப்ரவரி 2025 இல் 21,400 யூனிட்டுகளுக்கு மேல் அதன் அதிகபட்ச மாதாந்திர விற்பனையைப் பதிவு செய்தது.
- உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு ஐந்து ஃபிரான்க்ஸ் யூனிட்டுகளில் ஒன்று ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சாதனை குறித்து கருத்து தெரிவித்த மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹிசாஷி டகேயுச்சி, “ஃபிரான்க்ஸை தங்கள் விருப்பமான வாகனமாகத் தேர்ந்தெடுத்து, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பாக்ட் எஸ்யூவிகளில் ஒன்றாக மாற்றியதற்காக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
இந்த மைல்கல் இந்தியாவின் உற்பத்தி சிறப்பையும், எதிர்கால வடிவமைப்பு கொண்ட வாகனங்களுக்கான வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்ளவதனையும், துணிச்சலான ஸ்டைலிங், சிறந்த எரிபொருள் திறன் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளில் விரைவாக பிரபலமடைந்தது. நாங்கள் முன்னேறும்போது, எங்கள் வாடிக்கையாளர்களின் அற்புதமான மற்றும் மதிப்புமிக்க தயாரிப்புகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.”