Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

$ 1.4 பில்லியன் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் ஆட்டோ இந்தியா.!

by Automobile Tamilan Team
30 November 2024, 8:07 am
in Auto Industry
0
ShareTweetSend

skoda vw india tax issue

இந்தியாவில் செயல்படுகின்ற ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் ஆட்டோ (SAVWIPL) நிறுவனம், இந்தியாவில் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதில் அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் $ 1.4 பில்லியனை (ரூ.12,000 கோடி) வரி ஏய்ப்பு செய்துள்ளதாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் ஆட்டோ இந்திய நிறுவனத்தின் கீழ் ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் மட்டுமல்லாமல் ஆடி, போர்ஷே, மற்றும் லம்போர்கினி ஆகிய பிராண்டுகளின் கார்களும் விற்பனை செய்யப்படுகின்றது.

ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, செப்டம்பர் 30 தேதியிட்ட நோட்டீஸ் மூலம், ஃவோக்ஸ்வேகன் முழு கார்களையும் இறக்குமதி செய்ததாகக் கூறப்படுகிறது, இது முற்றிலும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டால் 30-35 சதவீத இறக்குமதி வரி செலுத்த வேண்டும். ஆனால், 5-15 சதவிகித வரியுடன் “தனிப்பட்ட பாகங்கள்” என “தவறாக சித்தரித்து இறக்குமதிகளை வகைப்படுத்தி” CKD (completely knocked down units) என இந்நிறுவனம் குறிப்பிட்டு வரிகளை ஏய்ப்பதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 2012 முதல் இறக்குமதி செய்யப்பட்ட ஸ்கோடா சூப்பர்ப், கோடியாக், ஆடி ஏ4, க்யூ5 மற்றும் டிகுவான் எஸ்யூவி ஆகிய மாடல்களே இந்த புகாரில் சிக்கியுள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள சுங்க ஆணையர் அலுவலகத்தின் 95 பக்க நோட்டீஸில், பாகங்கள் என குறிப்பிட்டு முழு கார்களையும் இறக்குமதி செய்து மோசடி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் அளித்த விளக்கம் பின்வருமாறு;

செக் குடியரசு, மெக்சிகோ, ஜெர்மனி மற்றும் பிற நாடுகளில் உள்ள சப்ளையர்களுடன் இணைக்கும் உள் மென்பொருளின் மூலம் கார்களுக்கான மொத்த ஆர்டர்களை Volkswagen India வழக்கமாக வழங்கியதாக நிறுவனத்தின் உள் மென்பொருளின் மதிப்பாய்வின் அடிப்படையில் இந்திய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்டர் செய்யப்பட்ட பிறகு, மென்பொருளானது அதை “முக்கிய பாகங்கள்/ உதிரி பாகங்களாக” பிரித்தது, மாடலைப் பொறுத்து ஒவ்வொரு வாகனத்திற்கும் தோராயமாக 700-1,500 பாகங்கள் வரை. பல விலைப்பட்டியல்களின் கீழ் தொடர்ச்சியாக மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் வெவ்வேறு கப்பல்களில் வெளிநாட்டில் கார் பாகங்கள் சேர்க்கப்பட்டு, பின்னர் தோராயமாக ஒரே நேரத்தில் இந்திய துறைமுகத்தை அடைந்ததாக இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

“இந்த தனிப்பட்ட பாகங்களுக்கு பொருந்தும் குறைவான வரியை செலுத்துவதற்காக இது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வோக்ஸ்வாகன் புலனாய்வாளர்களிடம் “செயல்பாட்டின் செயல்திறனுக்காக” அத்தகைய வழியைப் பயன்படுத்துவதாகக் கூறியது, ஆனால் வாதம் நிராகரிக்கப்பட்டது. “லாஜிஸ்டிக்ஸ் என்பது முழு செயல்முறையிலும் மிகச் சிறிய மற்றும் குறைவான குறிப்பிடத்தக்க படியாகும்… (ஸ்கோடா-வோக்ஸ்வாகன் இந்தியா) ஒரு தளவாட நிறுவனம் அல்ல” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கையில், ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா, “பொறுப்பான அமைப்பு, அனைத்து உலகளாவிய மற்றும் உள்ளூர் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு முழுமையாக இணங்குகிறது. நாங்கள் அறிவிப்பை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு எங்கள் முழு ஒத்துழைப்பை வழங்குகிறோம்.” என குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே, நிதி சிக்கலில் உள்ள ஃபோக்ஸ்வேகன் இந்தியாவிற்கு மிகப்பெரிய சிக்கலை வரி ஏய்ப்பு புகார் ஏற்படுத்தியுள்ளதால், எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Motor News

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

மாணவர்கள் செய்த டைகன் பிக்கப் டிரக் புராஜெக்ட் அறிமுகம்

காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் புதிய டீசரை வெளியிட்ட ஸ்கோடா

17 ஆண்டுகளில் 15 லட்சம் கார்களை தயாரித்த ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன்

ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா பெயரில் உதயமானது வோக்ஸ்வேகன் குழுமம்

Tags: Skoda Auto Volkswagen
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ஃபிளிப்கார்ட்டில் ராயல் என்ஃபீல்டு 350cc பைக்குகளை வாங்கலாம்.!

hyundai first india based electric suv 2027

பட்ஜெட் விலையில் ஹூண்டாய் எலக்ட்ரிக் எஸ்யூவி 2027ல் அறிமுகம்

சிம்பிள் எனர்ஜியின் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட மேக்னட் இல்லாத மோட்டார்.!

25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்த மஹிந்திரா அர்ஜூன் டிராக்டர்

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் 7 நாட்கள் இலவச மருத்துவ சிகிச்சை – நிதின் கட்கரி

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

1 கோடி ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்த சுசுகி

ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு 40 % ஜிஎஸ்டி வரி விதிப்பு..!

இ விட்டாரா எலக்ட்ரிக் ஏற்றுமதியை துவங்கிய மாருதி சுசுகி

25 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஸ்வராஜ் டிராக்டர்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan