மஹிந்திராவின் ஸ்வராஜ் டிராக்டர்ஸ் 1974 ஆம் ஆண்டு உற்பத்தி துவங்கி தற்பொழுது வரை சுமார் 25,00,000 டிராக்டர்களை தயாரித்து சாதனையை மொஹாலி, பஞ்சாபில் உள்ள ஆலையில் நிகழ்த்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் நிறுவனம் 20 லட்சம் யூனிட் உற்பத்தியைத் தாண்டிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மைல்கல் எட்டப்பட்டது, இது கடந்த பத்தாண்டுகளில் உற்பத்தியில் நிலையான வளர்ச்சியை எட்டி வருகின்றது.
1974 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட டிராக்டரான ஸ்வராஜ் 724 மாடலை அறிமுகப்படுத்தியதன் மூலம் செயல்படத் தொடங்கிய இந்த பிராண்ட், உள்நாட்டு டிராக்டர் சந்தையில் நிலையான இருப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது 2002ல் அதன் முதல் 5 லட்சம் உற்பத்தி மைல்கல்லை எட்டியது, அதன் பின்னர் 23 ஆண்டுகளில் அளவில் ஐந்து மடங்கு வளர்ந்துள்ளது.
2007 ஆம் ஆண்டு மஹிந்திரா கையகப்படுத்திய பின்னர் அபரிதமான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது.
ஸ்வராஜ் தற்பொழுது 25 ஹெச்பி முதல் 90 ஹெச்பி வரையிலான பல்வேறு டிராக்டர்களை வழங்குகிறது, இதில் ஸ்வராஜ் 855, 735, 744 போன்ற மாடல்களும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நயா ஸ்வராஜ் , டார்கெட் அடங்கும். இந்நிறுவன டிராக்டர்கள் பல்வேறு விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.