டாடா மோட்டார்ஸ் தனது ஹாரியர், நெக்ஸான், டியாகோ, டிகோர் மற்றும் ஹெக்ஸா போன்ற மாடல்களின் விலையை அதிகபட்சமாக ரூபாய் 55,000 வரை விலையை உயர்த்தியுள்ளது. விலை உயர்வு குறித்து டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிக்கவில்லை.
பெரும்பாலான மோட்டார் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விலை ஜனவரி முதல் வாரத்தில் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. தற்போது விற்பனைக்கு கிடைத்து வருகின்ற பிஎஸ் 4 மாடல் தான் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜின் பிப்ரவரி முதல் மேலும் உயர்த்தலாம்.
ஹாரியர் விற்பனைக்கு வெளியாகி முதல் வருடத்தை கடந்துள்ள நிலையில், மொத்தமாக 15,000க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது டாடாவின் ஹாரியர் எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.13.44 லட்சம் முதல் துவங்கி அதிகபட்சமாக டாப் வேரியண்ட் ரூ.17.31 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியிடப்பட உள்ள நிலையில், தற்போது கிடைக்கின்ற மாடலின் ஆரம்ப விலை ரூ.6.73 லட்சம் முதல் துவங்கி அதிகபட்சமாக ரூ.11.10 லட்சம் வரை கிடைக்கின்றது. ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை விலை உயர்ந்துள்ளது.
டியோகோ காரின் விலை ரூ.9,000 முதல் ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.4.55 லட்சம் துவங்கிய அதிகபட்சமாக ரூ.6.97 லட்சம் வரை கிடைக்கின்றது.
டாடா டிகோர் விலை ரூ.5.65 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.8.10 லட்சம் வரை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
டாடாவின் ஹெக்ஸா காரின் விலை ரூ.13.70 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.19.28 லட்சம் வரை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விலை அதிகபட்சமாக ரூ.44,000 வரை உயர்ந்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…