இந்தியாவின் துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடலாக உள்ள டாடா பஞ்சினை வெளியிட்டு 4 ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்த உற்பத்தி எண்ணிக்கை 6,00,000 கடந்துள்ள நிலையில், விற்பனை எண்ணிக்கையில் 70 % முதல்முறையாக கார் வாங்குபவர்களாக உள்ளனர் என டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்டுள்ளது.
குளோபல் NCAP மற்றும் பாரத் NCAP என இரு சோதனையிலும் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்று மிகவும் பாதுகாப்பான கார் என்ற பெருமையுடன் ICE, CNG & EV என மூன்றிலும் கிடைக்கின்றது.
Tata Punch SUV
பஞ்ச் எஸ்யூவி மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் எக்ஸ்டர் உள்ள நிலையில், இந்த மாடலை விட மிக சிறப்பான வரவேற்பினை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ள பஞ்ச் வாங்குபவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 70% பேர் முதல் முறையாக கார் வாங்குபவர்கள், இது மட்டுமல்லாமல் பெண்களால் பெரிதும் விரும்பும் மாடலாக உள்ளது என டாடா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Punch.ev உரிமையாளர்களில் 25% பேர் பெண்கள் என உறுதிப்படுத்தியுள்ள நிலையில், மேலும் முதற்கட்ட நகரங்களிலிருந்து 24%, இரண்டாம் கட்ட நகரங்களில் 42% மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களிலிருந்து 34% உரிமையாளர்கள் உள்ளனர்.
2024 ஆம் ஆண்டு இந்தியாவின் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை பெற்று மாருதியின் முதலிடத்தை கைப்பற்றியது.
ஆனால் நடப்பு 2025 ஆம் ஆண்டின் H1 எனப்படுகின்ற முதல் 6 மாதங்களில் விற்பனை எண்ணிக்கை 23 % சரிவடைந்துள்ளது. ஜனவரி 2025 முதல் ஜூலை 2025 வரை சுமார் 84,579 யூனிட்டுகளாக பதிவு செய்துள்ளது. ஆனால் முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 1,10,398 ஆக இருந்தது.