இந்தியாவில் சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனங்களை மீண்டும் தென்னாப்பிரிக்கா சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டாடாவின் கர்வ், பன்ச், ஹாரியர் மற்றும் டியாகோ என நான்கு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்பாக 2019 வரை தென்னாப்பிரிக்காவில் தனது கார்களை விற்பனை செய்து வந்த டாடா சந்தையை விட்டு வெளியேறியது, தற்பொழுது இந்திய சந்தையில் மிக பாதுகாப்பான மற்றும் நவீனத்துவமான வசதிகளை அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடதக்கதாகும்.
தென்னாப்பிரிக்காவில், டாடா மோட்டார்ஸ் ஆரம்பத்தில் 40 டீலர்ஷிப்கள் மூலம் செயல்படும், 2026 ஆம் ஆண்டுக்குள் 60 ஆக விரிவடையும். மோட்டஸ் நிறுவனத்துடன் இனைந்து, நாடு தழுவிய விற்பனை, சேவை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் திறன் மேம்பாடு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறது.
இந்தியாவில் டாடா எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் அமோக வரவேற்பினை பெற்று முதன்மையான நிறுவனமாக விளங்கி வருகின்றது.