கடந்த மே மாதம் 2023 விற்பனை முடிவில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 20,410 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய மே 2022 உடன் ஒப்பீடுகையில் 110 % வளர்ச்சியை அடைந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாத விற்பனை எண்ணிக்கை 10,216 ஆக பதிவு செய்திருந்தது.
உள்நாடு மற்றும் ஏற்றுமதி என ஒட்டுமொத்தமாக 20,410 என்ற எண்ணிக்கையை பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் மே 2023-ல் 19,379 எண்ணிக்கை மற்றும் ஏற்றுமதி விற்பனை 1,031 எண்ணிக்கை (அர்பன் க்ரூஸர் ஹைரைடர்). ஏப்ரல் 2023-ல் 15,510 எண்ணிக்கையை விட மாதந்தோறும், ஒருங்கிணைந்த உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி விற்பனை 32% அதிகரித்துள்ளது.
CY2023 முதல் ஐந்து மாதங்களில் ஒட்டுமொத்த மொத்த விற்பனை (உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி) 82,763 எண்ணிக்கை ஆகும், இதனை முந்தைய காலண்டர் வருடம் ஜனவரி-மே 2022 உடன் ஒப்பீடுகையில் 58,505 எண்ணிக்கையை விட 42% வளர்ச்சி அதிகமாகும்.
மே 2023 TKM விற்பனை நிலவரம் குறித்து கருத்து தெரிவிக்கையில், விற்பனை மற்றும் மூலோபாய சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் அதுல் சூட் குறிப்பிடுகையில், ” மிக சிறப்பான வரள்ச்சியை பதிவு செய்ய, அர்பன் க்ரூஸர் ஹைரைடர், இன்னோவா போன்ற சமீபத்திய வெளியீடுகளுடன் டொயோட்டா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சீரமைப்பு மற்றும் தொடர்ந்து வளர்ந்து வரும் தயாரிப்பு திறனை எடுத்துக்காட்டுகிறது என்று நாங்கள் நம்புகிறோம். ஹைக்ராஸ் மற்றும் ஹைலக்ஸ் ஆகியவை அந்தந்தப் பிரிவுகளில் வலுவான விற்பனை சந்தையை பெற்றுள்ளது.
“சமீபத்தில் எங்களது பிடாடி ஆலையில் மே 2023 முதல் மூன்றாவது ஷிப்ட் செயல்படுத்துவதன் மூலம் எங்கள் உற்பத்தியை மேம்படுத்தினோம், இதன் மூலம் சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பெரிதும் உதவியுள்ளது. என தெரிவித்துள்ளார்.