ஆட்டோ எக்ஸ்போ 2018 : சுசுகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டர் அறிமுகம்

ஆட்டோ எக்ஸ்போ 2018 : சுசுகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டர் அறிமுகம் 1இந்தியாவில் பிரிமியம் ரக சந்தையை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ள சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம், ஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் பிரிமியம் ரக மேக்ஸி ஸ்கூட்டர் மாடலான சுசுகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரை காட்சிப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுசுகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டர்

வருகின்ற பிப்ரவரி 9ந் தேதி முதல் 14ந் தேதி வரை நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் சுஸூகி நிறுவனம் சர்வதேச அளவில் உயர் ரக பிரிமியம் ஸ்கூட்டர் மாடலாக விளங்கும் பர்க்மேன் 125சிசி , 150சிசி, 200சிசி, 400சிசி மற்றும் 650சிசி ஆகிய மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

இந்தியாவிற்கு வரவுள்ள ஸ்கூட்டர் மாடலில் இடம்பெற உள்ள எஞ்சின் விபரம் பற்றி எந்த விபரங்களும் வெளியாகவில்லை, இந்தியா சந்தையில் 125சிசி அல்லது 150சிசி எஞ்சின் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலின் தோற்ற உந்துதலில் வடிவமைக்கப்பட்ட மாடலாக வரவுள்ள இந்த ஸ்கூட்டரில், எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், வின்ட்ஸ்கீரின் ஆகியவற்றை பெற்றதாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வருகின்ற ஆட்டோ எக்ஸ்போவில் சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டர் பற்றி முழுமையான விபரங்களை அறிந்து கொள்ளலாம், மேலும் ஆட்டோ எக்ஸ்போ பற்றி விபரங்களை தொடர்ந்து அறிந்து கொள்ள இணைந்திருங்கள்.

Recommended For You

About the Author: Rayadurai