ஹீரோ எக்ஸ்பல்ஸ் அட்வென்ச்சர் பைக் கான்செப்ட் அறிமுகம் – EICMA 2017

இத்தாலி மிலன் நகரில் நடைபெற்று வரும் EICMA 2017 மோட்டார் பைக் கண்காட்சியில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அட்வென்ச்சர் ரக பைக் மாடலாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ்

கடந்த 2011 ஆம் ஆண்டில் ஹீரோ அறிமுகம் செய்திருந்த இம்பல்ஸ் பைக் மாடல் பெரிதான வரவேற்பினை பெறத் தவறிய நிலையில் 2016 ஆம் ஆண்டில் முற்றிலும் சந்தையிலிருந்து நீக்கபட்டது. இந்த மாடலின் உந்துதலில் புதிய எக்ஸ்பல்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இ.ஐ.சி.எம்.ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் கான்செப்ட் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள எக்ஸ்பல்ஸ் மாடல் ஆஃப் ரோடு மற்றும் டூரிங் ஆகிய இரண்டு விதமான வகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு அம்சங்களை பெற்றுள்ள எக்ஸ்பல்ஸ் மாடலில் எக்ஸ்ட்ரீம் 200S பைக்கில் இடம்பெற உள்ள 200சிசி எஞ்சினை பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்படும் வாய்ப்புகள் உள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள எக்ஸ்பல்ஸ் பைக்கில் வட்ட வடிவ எல்இடி விளக்குகள், வின்ட்ஷீல்டு கிளாஸ், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் பெற்று ஸ்போக் வீல்களுடன் இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் பெற்றிருப்பதுடன் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் அட்வென்ச்சர் ரக பிரிவில் பிரசத்தி பெற்ற விளஙகும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் மாடலுக்கு இணையான அம்சத்தை பெற்ற எக்ஸ்பல்ஸ் 200சிசி முதல் 300சிசி க்கு இடையில் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் அடுத்த ஆண்டின் மத்தியில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

Recommended For You