இந்தியாவில் பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனத்தின் அங்கமான அமெரிக்காவின் பிரசத்தி பெற்ற ஃபயர்ஸ்டோன் பிராண்டில் இரு கார் டயர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. FR500 மற்றும் LE02 என இருவிதமான டயர்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
ரூ.2,200 ஆரம்ப விலையில் தொடங்கும் FR500 வகை டயர்கள் பயணிகள் காருக்கும் ரூ.5,500 ஆரம்ப விலையில் தொடங்கும் LE02 வகை டயர்கள் எஸ்யூவி கார்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஃபயர்ஸ்டோன் எஃப்ஆர்500 டயர்கள் 24 விதமான அளவுகளில் 12 இன்ச் ரிம் முதல் 16 இன்ச் ரிம் வரையிலான விட்டமுள்ள கார்களுக்கு ஏற்ற வகையில் கிடைக்கும்.
ஃபயர்ஸ்டோன் எல்இ02 டயர்கள் 3 விதமான அளவுகளில் 15 இன்ச் மற்றும் 16 இன்ச் விட்டமுள்ள எஸ்யூவி ரக கார்களுக்கு ஏற்ற வாகையில் அமைந்திருக்கும். மேலும் அடுத்த இருவருடங்களில் எல்இ02 பிரிவில் கூடுதலாக 11விதமான அளவுகளில் டயர்கள் வரவுள்ளது.
இரு டயர்களுமே சிறப்பான கட்டுமானத்தை பெற்றுள்ளதால் அனைத்து விதமான சாலைகளிலும் சிறப்பாக பயணிக்கும் வகையில் அமைந்திருக்கும். பிரேக்கிங் பெர்பாமென்ஸ் சிறப்பான வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது எந்த ஆட்டோமொபைல் நிறுவனங்களுடனும் இணைந்து ஃபயர்ஸ்டோன் பிராண்டில் டயர் தயாரிக்கும் எண்ணம் இல்லை . முதற்கட்டமாக அதிக வாடிக்கையாளர்களிடன் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் , எஸ்யூவி மற்றும் பயணிகள் கார்கள் பிரிவில் சிறப்பான சந்தை மதிப்பினை பெறுவதே நோக்கமாகும் , என பிரிட்ஜ்ஸ்டோன் நிரவாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பிரிட்ஜ்ஸ்டோன் தொழிற்சாலைகள் புனே , சக்கன் மற்றும் கேதா போன்ற பகுதிகளில் அமைந்துள்ள ஆலைகளின் வாயிலாக நாள் ஒன்றுக்கு 25,000 டயர்கள் தயாரிக்க முடியும்.