ஃபெராரி கார்களுக்கு முன்பதிவு தொடங்கியது

இந்தியாவில் ஃபெராரி கார்களுக்கு என அதிகார்வபூர்வமான சேவை மையங்கள் தொடங்கிய பின்னர் தற்பொழுது முன்பதிவு தொடங்கியுள்ளது. வரும் ஜூலை முதல் டெலிவரி செய்யப்படலாம் என தெரிகின்றது.

ஃபெராரி 488 GTB
சிரியன்ஸ் குழுமத்தின் மூலம் ஃபெராரி கார்கள் விற்பனை செய்ப்பட்ட பொழுது திருப்தியின்மை வாடிக்கையாளர்களின் புகாரின் பேரில் ஃபெராரி நேரடியான விற்பனை தடைபட்டது.

ஃபெராரி கார்கள் ஃபெராரி நிறுவனத்தின் நேரடியான கட்டுப்பாடில் மீண்டும் இந்திய சந்தையில் விற்பனையை தொடங்கியுள்ளது. தற்பொழுது முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் மும்பையில் வரும் அக்டோபர் மாதம் சேவை மையம் தொடங்க உள்ளனர். மிகவும் சக்திவாய்ந்த என்ஜின் ஸ்போர்ட்டிவ் தோற்றம் மற்றும் சொகுசு தன்மை கொண்டவை ஃபெராரி கார்களாகும்.

ஃபெராரி தனது அனைத்து மாடல்களையும் இந்தியாவில் களமிறக்கியுள்ளது. தொடக்க விலையாக ஃபெராரி கலிஃபோரினியா T மாடல் ரூ.3.30 கோடியில் தொடங்கி ரூ.4.72 கோடி விலையில் ஃபெராரி F12 பெர்லின்டா வரை மொத்தம் 6 மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஃபெராரி கார்களுக்கு போட்டியாக லம்போர்கினி கார்கள் விளங்குகின்றன. லம்போர்கினி கார் இந்தியாவில் நல்ல எண்ணிக்கை பதிவு செய்துவருகின்றது. மஸாராட்டி கார்களும் இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்குகின்றது.

ஃபெராரி கார்களின் விலை பட்டியல் (ex-showroom Mumbai)

ஃபெராரி கலிஃபோரினியா T – ரூ. 3.30 கோடி

ஃபெராரி 488 GTB Coupe – ரூ. 3.84 கோடி

ஃபெராரி  458 Spider – ரூ. 4.07 கோடி

ஃபெராரி  458 Speciale – ரூ. 4.25 கோடி

ஃபெராரி FF – ரூ. 4.57 கோடி

ஃபெராரி F12 Berlinetta – ரூ. 4.72 கோடி

Ferrari Starts Accepting Bookings In India