ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் வேரியண்ட் விபரம்

0
புதிய ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் அடுத்த மாதம் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் வேரியண்ட் விபரங்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்பயர் செடான் காரில் 4 வேரியண்ட்கள் உள்ளது.

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர்

ஆஸ்பயர் காரில் மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன் 4 விதமான வேரியண்டில் விற்பனைக்கு வரவுள்ளது. ஆம்பியன்ட் , டிரென்ட் , டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ப்ளஸ் ஆகும்.

1.2 லிட்டர்  பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அனைத்து வேரியண்டிலும் 1.5 பெட்ரோல் தானியங்கி வேரியண்ட் டாப் மாடல் டைட்டானியம் +  வேரியண்டில் மட்டும்.

ஆம்பியன்ட்

ஆஸ்பயர் ஆம்பியன்ட் வேரியண்டில் 14 இஞ்ச் ஸ்டீல் வீல் , முன்பக்க கதவுகளுக்கு மட்டும் பவர் வின்டோஸ் , குயீட் மீ ஹோம் விளக்குகள் , ஏசி , ரீமோட் லாக்கிங் , என்ஜின் இம்மொபைல்சர் , இரட்டை காற்றுப்பைகள் போன்ற வசதிகள் உள்ளன.

டிரென்ட்

ஆம்பியன்ட் வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக பனிவிளக்குகள் , கருப்பு நிள இன்டிரியர் அப்லிக் , ரியர் பவர் வின்டோஸ் ,பூட் விளக்கு , ஆடியோ அமைப்பு , யூஎஸ்பி , பூளுடூத் தொடர்பு , ஸ்டீயரிங் வீல் ஆடியோ மற்றும் போன் கட்டுப்பாடு பொத்தான்கள்  , மை ஃபோர்டு ட்க் போன்றவை உள்ளது.

டைட்டானியம் 

டிரென்ட் வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக  ரியர் டிஃபோக்ர் , 14 இஞ்ச் ஆலாய் வீல் , ஏபிஎஸ், இபிடி ,  ஓட்டுநர் இருக்கை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, இஎஸ்பி , டிராக்‌ஷன் கட்டுப்பாடு , மலை ஏற இறங்க உதவி போன்ற வசதிகள் ஆஸ்பயர் காரில் உள்ளது.

டைட்டானியம் + 

டைட்டானியம் வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக 4.2 இஞ்ச் பல தகவல் தரும் அமைப்பு , பக்கவாட்டு கர்ட்டைன் காற்றுப்பைகள் , ஃபோர்டு மை லிங்க் , அவசரகால உதவி என பல வசதிகளை பெற்றுள்ளது. ஆனால் மை ஃபோர்டு ட்க் இல்லை.

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் என்ஜின் விபரம்

 Ford Figo Aspire Variant details