ஃபோர்டு ஃபிகோ மற்றும் கிளாசிக் கார்களை திரும்ப பெறுகின்றது

ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிகோ மற்றும் கிளாசிக் காரில் உள்ள சஸ்பென்ஷன் மற்றும் பவர் ஸ்டீயரீங் ஹோஸ் போன்றவற்றில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வதற்க்காக திரும்ப அழைத்துள்ளது.

கடந்த 2011 ஜனவரி முதல் 2012 ஜூன் வரை தயாரிக்கப்பட்ட ஃபிகோ மற்றும் கிளாசிக் கார்களில் இந்த பிரச்சனை உள்ளதை ஃபோர்டு உறுதி செய்துள்ளது. சஸ்பென்ஷன் மற்றும் பவர் ஸ்டீயரிங் ஹோஸ் மாற்றுவதற்க்காக 1.66 லட்சம் கார்களை திரும்ப பெறுகின்றதாம்.

சஸ்பென்ஷன் பிரச்சனைக்காக ஃபிகோ வகையில் 1,09,469 கார்களையும், கிளாசிக் வகையில் 22453 கார்களையும் அழைக்கின்றது. மேலும் பவர் ஸ்டீயரிங் ஹோஸ் குறைக்காக ஃபிகோ வகையில் 30,681 கார்களையும், கிளாசிக் வகையில் 3418 கார்களையும் திரும்ப அழைக்கின்றது.

இந்த பாகங்கள் அனைத்தும் இலவசமாக மாற்றி தருவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து விபரங்களை வாடிக்கையாளர்களுக்கு ஃபோர்டு தெரிவித்துள்ளது.

Exit mobile version