ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காரின் வெளியிடுவதற்க்கான முயற்சியில் ஃபோர்டு களமிறங்கயுள்ளது. சில நாட்களுக்கு முன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூட மிக பெரிய அறிவிப்பு காத்திருக்கின்றது என கீச்சுயிட்டது.
பல யூக அடிப்படையிலாக வருகிற மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் வெளிவரலாம். அல்லது ஏப்ரல் மாதம் கூட வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக பெரிய எதிர்பார்ப்புடன் உள்ள ஈகோஸ்போர்ட் இந்தியாவின் எஸ்யூவி வரலாற்றை புதிய பாதைக்கு அழைத்து செல்லும்.
ஈகோஸ்போர்ட் எஸ்யூவி காரின் பெட்ரோல் என்ஜின் மிக சிறப்பு வாய்ந்தாகும்.
1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 1.6 லிட்டர் எஞ்சினுக்கு இணையான ஆற்றலை தரும்.கூடுதலான மைலேஜ் கிடைக்கும். ஃபியஸ்ட்டாவில் பொருத்தப்பட்ட அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் ஈக்கோஸ்போர்ட்டிலும் பொருத்தப்படும்.