மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கார்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் முதன்மை வகிக்கின்று. ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மிக சிறப்பான அவசரகால உதவினை ஃபோர்டு தந்துள்ளது.
இந்தியாவிலே முதன்முறையாக அவசரகால வசதியை ஃபோர்டு வழங்குகின்றது. விபத்து நடந்துவிட்டால் உடனடியாக அருகில் உள்ள 108 சேவை மையத்திற்க்கு குரல் குறுஞ்செயதியை அனுப்பிவிடும். மேலும் காற்றுபைகள் விரிவடைந்துவிடும் அல்லது எரிபொருள் பம்ப இனைப்பினை தானாகவே துண்டிக்கப்பட்டவுடன் குறுஞ்செய்தி 108 சேவை மையத்திற்க்கு சென்றுவிடும்.
இதுன் மூலம் விபத்தின் பொழுது ஆம்பூலன்ஸ் விரைவாக வந்து மீட்டு செல்ல உதவும். பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் உள்ளது ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி.
இது எவ்வாறு இயங்கும் என்பதற்க்கு ஃபோர்டு தந்துள்ள விளக்கப்படம்
காத்திருங்கள் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் அதிகாரப்பூர்வ படங்கள் விரைவில்