சவாலை தரக்கூடிய விலையில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விற்பனைக்கு வந்துள்ளது. எனவே எஸ்யூவி சந்தையில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி பற்றி முழுவிபரங்கள் அனைத்தும் முன்பே வெளிவந்துவிட்டன. ரூ.5.59 லட்சதில் தொடங்கும் ஈக்கோஸ்போர்ட்  டாப் வேரியண்ட்டின் விலையே 8.99 லட்சம்தான்.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
3 விதமான என்ஜின்களில் 4 விதமான வேரியண்ட்டில் கிடைக்கும். அவற்றில் இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் ஆகும். அவை
உலகின் சிறந்த என்ஜினுக்கான விருதினை வென்ற ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் டாப் வேரியண்டான டைட்டானியத்தில் மட்டுமே கிடைக்கும். ஈக்கோபூஸ்ட் 1.0 லிட்டர் என்ஜின் ஆனது 125 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 112 பிஎஸ் ஆகும்.  5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்யிலும் கிடைக்கும்.
1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.  91 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
வேரியண்ட் விபரங்கள்
ஆம்பியன்ட்
ஆம்பியன்ட் வேரியண்ட்டில் பவர் ஸ்டீயரீங், ஏசி, முன்புற பவர் வின்டோ, பூளூடூத், ஏயூஎக்ஸ், யூஎஸ்பி, டூவல் டோன் இண்டிரியர், மற்றும் சென்டரல் ரீமோட் லாக்கிங்.
டிரென்ட்
டிரென்ட் வேரியண்டில் முன்புற மற்றும் பின்புற பவர் வின்டோ, பின்புற இருக்கைகள் மடக்க முடியும், பிரேக் அலர்ட், மற்றும் ஏபிஎஸ் வசதிகள் உள்ளன.
டைட்டானியம்
டைட்டானிய வேரியண்டில் டிரென்ட் மற்றும் ஆம்பியன்ட் போன்ற வசதிகளுடன், கீலெஸ் என்ட்ரி, என்ஜின் ஆன்/ஆஃப் பட்டன்,  பனி விளக்குகள் என பல வசதிகளை தந்துள்ளது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
விபத்தின் பொழுது 108 உதவி எண்ணை தானாகவே அழைக்கும் வசதிகளை ஈக்கோஸ்போர்ட் கொண்டுள்ளது. 7 விதமான வண்ணங்களில் ஈக்கோஸ்போர்ட் கிடைக்கும்.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின்
ஆம்பியன்ட் ரூ.5.59 லட்சம் 
டிரென்ட் ரூ.6.49 லட்சம் 
டைட்டானியம் ரூ.7.51 லட்சம் 
டைட்டானியம் ஆட்டோமேட்டிக் ரூ.8.45 லட்சம்
1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜின்
டைட்டானியம் ரூ.7.9 லட்சம் 
டைட்டானியம் ஆப்ஷன் ரூ.8.29 லட்சம்
1.5 லிட்டர் டீசல் என்ஜின்
ஆம்பியன்ட் ரூ.6.69 லட்சம்
டிரென்ட் ரூ.7.61 லட்சம்
டைட்டானியம் ரூ.8.62 லட்சம் 
டைட்டானியம் ஆப்ஷன் ரூ.8.99 லட்சம்
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்