ஃபோர்டு மஸ்டாங் காரில் ஹைபிரிட் என்ஜின்

பிரசத்தி பெற்ற மஸில் ரக ஃபோர்டு மஸ்டாங் காரில் ஹைபிரிட் என்ஜின் ஆப்ஷனை இணைக்க ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல் ஹைபிரிட் ஆப்ஷனில் மஸ்டாங் கார் கிடைக்க உள்ளது.

ஹைபிரிட் என்ஜின்

சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபோர்டு மஸ்டேங் மாடலின் ஜிடி வெர்ஷன் மாடல் விலை ரூ. 65 லட்சம் ஆகும். முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்றது. மாற்று எரிபொருளுக்கான முயற்சியில் பல்வேறு வாகன நிறுவனங்கள் தீவரமான முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் ஃபோர்டு மஸ்டாங்கில் ஹைபிரிட் மாடல் இணைக்கப்பட உள்ளதாக அதிகார்வப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த என்ஜினில் ஹைபிரிட் ஆப்ஷன் இடம்பெறும் என்ற உறுதியான தகவல் இல்லையென்றாலும் வி8 என்ஜின் கொண்ட மாடல் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2.3 லிட்டர் ஈகோபூஸ்ட் என்ஜின் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதிகபட்சமாக 400 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஹைபிரிட் மாடலாக விளங்கும்.

ஃபோர்ட் நிறுவனம் $4.5 பில்லியன் முதலீட்டில் எலக்ட்ரிக் கார்களுக்கான திட்டத்தை செய்ல்படுத்த தொடங்கி உள்ள நிலையில் தற்பொழுது கூடுதலாக  $700 மில்லியன் முதலீட்டை ஹைபிரிட் பவர்டெரியன் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளது. எதிர்காலத்தில் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தங்களுடைய அனைத்து மாடல்களையும் ஃபோர்டு மேம்படுத்த திட்டமிள்ளது.

Exit mobile version