இந்தியாவில் அதிக செல்வாக்கு மிக்க கார் பிராண்ட் எது என்ற ஜேடி பவர் சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. செல்வாக்கு மிக்க பிராண்டில் மாருதி சுஸுகி முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்தியாவின் எஸ்யூவி தயாரிப்பாளரான மஹிந்திரா ஐந்தாமிடத்திலும் , டாடா மோட்டார்ஸ் ஆறாமிடத்திலும் டொயோட்டா மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஒரு மாடலை மட்டும் விற்பனை செய்யும் மிட்சுபிஷி 14வது இடத்தில் உள்ளது.
1. மாருதி சுஸூகி
இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளரான மாருதி சுஸூகி பட்டிதொட்டியெல்லாம் தனது முத்திரையை பதிவு செய்துள்ளது. மிக வலுவான டீலர்களுடன் தரமான வாகனங்களின் மூலம் இந்திய வாடிக்கையாளர்களின் மனதில் அதிக செல்வாக்கு பெற்றுள்ளது. ஜேடி பவர் மதிப்பெண் 839 ஆகும்.
2. ஹூண்டாய் மோட்டார்ஸ்
கொரியாவின் ஹூண்டாய் மோட்டார்ஸ் விற்பனையில் இந்தியளவில் இராண்டமிடத்திலும் ஃபூளூடிக் வடிவத்தினால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று விளங்குகின்றது.
3. டொயோட்டா
தரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாத கார்களை தயாரிக்கும் டொயோட்டா மூன்றாமிடத்தில் உள்ளது. இன்னோவோ ,ஃபார்ச்சூனர் , கரோல்லா போன்றவை முக்கிய மாடலாகும்.
4. ஹோண்டா
டீசல் மாடல்கள் வருகைக்கு பின்னர் ஹோண்டாவின் விற்பனை மற்றும் பிராண்ட் மதிப்பு போன்றவை மேலும் அதிகரித்துள்ளது. சிட்டி காரின் மூலம் மிக எளிதாக வாடிக்கையாளர்கள் மனதில் இடம்பிடித்தது.
5. மஹிந்திரா
எஸ்யூவி என்றால் சட்டென்று நினைவுக்கு வரும் நம் நாட்டின் மஹிந்திரா நிறுவனம் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. பொலிரோ , ஸ்கார்ப்பியோ , எக்ஸ்யூவி 500 போன்ற மாடல்கள் சிறப்பான மாடலாகும்.
6. டாடா மோட்டார்ஸ்
இந்தியாவின் டாடா குழுமம் போல்ட் மற்றும் ஸெஸ்ட் காரிகளின் அறிமுகத்திற்க்கு சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது.
7. ஃபோக்ஸ்வேகன்
ஃபோக்ஸ்வேகன் சிறப்பான செயல்திறன் மற்றும் தரமான கார்களை பெற்றுள்ளது.
8. ஃபோர்டு
ஃபோர்டு நிறுவனம் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மூலம் நல்லதொரு மதிப்பினை பெற்றுள்ளது. புதிய ஃபிகோ , ஃபிகோ ஆஸ்பயர் நல்ல வரவேற்பினை பெறலாம்
9. ஸ்கோடா
ஸ்கோடா ஆட்டோ பிரிமிம் ரக வாடிக்கையாளர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளது.
10. செவர்லே
கடந்த சில வருடங்களாக சந்தை மதிப்பை இழந்து வரும் செவர்லே புதிய ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி காரை இன்னும் சில வாரங்களில் அறிமுகம் செய்ய உள்ளது.
Most Influence car brands in India – 2015