Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

அதிக மைலேஜ் தரும் டாப் 5 பைக்குகள் – 2017

by automobiletamilan
மே 10, 2017
in Wired, செய்திகள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் அதிக மைலேஜ் தருகின்ற டாப் 5 பைக்குகள் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்திய சந்தையில் பிஎஸ் 4 நடைமுறைஅமலுக்கு வந்துள்ள நிலையில் சில பைக்குகள் நீக்கப்பட்டுள்ளதால் முதல் 5 இடங்களை பிடிக்கும் பைக்குகளை இங்கே காணலாம்.

அதிக மைலேஜ் தரும் டாப் 5 பைக்குகள்

உலகின் அதிக மைலேஜ் தரும் பைக் என்ற பெருமைக்குரிய ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக் சந்தையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் முதலிடத்தை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சிடி 100 பைக் பெற்றுள்ளது. தொகுக்கப்பட்டுள்ள மைலேஜ் விபரங்கள் அனைத்தும் ஆராய் அமைப்பின் விபரங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளவை, பயன்பாட்டில் மைலேஜ் மாறுபடும் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள விலை விபரங்கள் அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

1. பஜாஜ் CT 100

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள குறைந்தபட்ச விலை கொண்ட மாடலாக வலம் வருகின்ற பஜாஜ் ஆட்டோவின் பஜாஜ் CT 100 மற்றும் CT 100பி பைக்கில் 8.08 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் வகையிலான 99.27 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு 4 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

தொடக்கநிலை கம்யூட்டர் பிரிவில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்ற பஜாஜ் சிடி 100 பைக் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 99.1 கிமீ ஆகும்.

Specifications Bajaj CT100/CT100B
எஞ்சின் வகை ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு
எஞ்சின் சிசி 99.27 cc
பவர் 8.08 bhp at 7,500 rpm
டார்க் 8.05 Nm at 4,500 rpm
கியர்பாக்ஸ் 4 வேக மேனுவல்
எடை 108 kg
மைலேஜ் 99.1 kmpl
ஆரம்ப விலை ரூ. 32,398

2. பஜாஜ் பிளாட்டினா 100ES

பஜாஜின் மற்றொரு மாடலான  பிளாட்டினா கம்ஃபோர்ட்டெக் என அழைக்கப்படும் 100 இஎஸ் பைக்கில் DTS-i ட்வின் ஸ்பார்க் நுட்பத்துடன் கூடிய 102சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8.08 பிஹெச்பி பவருடன் மிக சிறப்பான இருக்கை மற்றும் சஸ்பென்ஷன் வசதியை பெற்றதாக விற்பனையில் உள்ள   பிளாட்டினா ES பைக் மிகவும் நம்பகரமானதாக விளங்கிவருகின்றது.

தொடக்கநிலை கம்யூட்டர் பிரிவில் பஜாஜின் மற்றொரு மாடலாக விளங்கும் பஜாஜ் பிளாட்டினா 100ES பைக் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 96.9 கிமீ ஆகும்.

Specifications Bajaj Platina 100ES
எஞ்சின் வகை ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு
எஞ்சின் சிசி 102 cc
பவர் 8.08 bhp at 7,500 rpm
டார்க் 8.05 Nm at 4,500 rpm
கியர்பாக்ஸ் 4 வேக மேனுவல்
எடை 108 kg
மைலேஜ் 96.9 kmpl
ஆரம்ப விலை ரூ. 44,118

3. டிவிஎஸ் ஸ்போர்ட்

தமிழகத்தைச் சேர்ந்த நம்பகமான மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான டிவிஎஸ் கம்பெனியின் டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் டியூரோலைஃப் 99.77சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7.7 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் குறைந்த விலை பைக் மாடலாக ஸ்போர்ட் விளங்குகின்றது.

கம்யூட்டர் பிரிவில் சிறந்த மைலேஜ் மற்றும் குறைந்த விலை மாடலாக விளங்கும் டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 95 கிமீ ஆகும்.

Specifications TVS Sport
எஞ்சின் வகை ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு
எஞ்சின் சிசி 99.77 cc
பவர் 7.7  bhp at 7,500 rpm
டார்க் 7.8 Nm at 4,500 rpm
கியர்பாக்ஸ் 4 வேக மேனுவல்
எடை 108.5 kg
மைலேஜ் 95 kmpl
ஆரம்ப விலை ரூ. 38,515

4. ஹீரோ ஸ்பிளென்டர் வரிசை

இந்தியாவின் முதன்மையான மோட்டார் சைக்கிள் மாடலாக விளங்குகின்ற ஸ்பிளென்டர் வரிசை பைக்குகளில் இடம்பெற்றுள்ள 97.2 சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட ஸ்பிளென்டர் பிளஸ் ,ஸ்பிளென்டர் பிளஸ் ஐ3எஸ் மற்றும்  ஸ்பிளென்டர் ப்ரோ என மொத்தம் மூன்று பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றது. அதிகபட்சமாக 8.36 bhp பவரை வெளிப்படுத்துகின்றது.

 

சிறந்த மைலேஜ் அதிகம் விற்பனை ஆகின்ற மாடலாக விளங்கும் ஹீரோ ஸ்பிளென்டர் பைக் வரிசை மைலேஜ் ஒரு லிட்டருக்கு 93.2 கிமீ ஆகும்.

Specifications Hero Splendor Bikes
எஞ்சின் வகை ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு
எஞ்சின் சிசி 97.2 cc
பவர் 8.36 bhp at 7,500 rpm
டார்க் 8.05 Nm at 4,500 rpm
கியர்பாக்ஸ் 4 வேக மேனுவல்
எடை 112 kg
மைலேஜ் 93.2 kmpl
ஆரம்ப விலை ரூ. 48,755

5.  ஹீரோ எச்எஃப் டீலக்ஸ்

ஹீரோ நிறுவனத்தின் மிக குறைந்த விலை மாடலாக வலம் வருகின்ற எச்எஃப் வரிசை பைக்குகளில் எச்எஃப் டீலக்ஸ் , எச்எஃப் டீலக்ஸ் ஐ3எஸ் மற்றும் எச்எஃப் டீலக்ஸ் ஈகோ என மூன்று மாடல்களிலும் 97.2 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8.36 bhp பவரை வெளிப்படுத்துகின்றது.

மைலேஜ் மற்றும் குறைந்த விலை பெற்ற மாடலாக விளங்கும் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் வரிசை மைலேஜ் ஒரு லிட்டருக்கு 88.5 கிமீ ஆகும்.

Specifications Hero HF-Deluxe
எஞ்சின் வகை ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு
எஞ்சின் சிசி 97.2 cc
பவர் 8.36 bhp at 7,500 rpm
டார்க் 8.05 Nm at 4,500 rpm
கியர்பாக்ஸ் 4 வேக மேனுவல்
எடை 112 kg
மைலேஜ் 88.5 kmpl
ஆரம்ப விலை ரூ. 39,990

Tags: Motorcycleடாப் 10
Previous Post

ரூ.2.32 கோடியில் லெக்சஸ் LX 450d விற்பனைக்கு வெளியானது

Next Post

கிராஷ் டெஸ்டில் தோல்வியடைந்த மேட் இன் இந்தியா டஸ்ட்டர்

Next Post

கிராஷ் டெஸ்டில் தோல்வியடைந்த மேட் இன் இந்தியா டஸ்ட்டர்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version