இந்தியாவின் முத்திரை போல திகழும் அம்பாசிடர் கார் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அம்பாசிடர் பல புதிய நவீன கார்களின் விற்பனைக்கு மத்தியிலும் அதிகரித்து வருவது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சினை உறுதி செய்துள்ளது.
மேலும் பிஎஸ்-4 எஞ்சினில் ஜூன் மாதம் வெளிவரவுள்ளதால் விற்பனை இன்னும் அதிகரிக்கலாம். மேலும் அம்பாசிடர் காரினை அடிப்படையாக கொண்ட அம்பாசிடர் ஹேட்ச்பேக் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏப்ரல் 2013யில் 407 அம்பாசிடர் கார்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 2012 யில் 68 கார்களை மட்டுமே விற்பனை செய்தது. மேலும் மிட்ஷ்பிஷியுடன் இனைந்து தயாரிக்கும் தயாரிப்புகளான லேன்சர் கேடியா, அவூட்லேண்டர், பஜீரோ போன்ற கார்கள் கடந்த மாதம் ஏதும் விற்பனை ஆகவில்லை. பஜீரோ ஸ்போர்ட் 113 கார்கள் விற்பனை ஆகியுள்ளது.