ஆடி எலக்ட்ரிக் கார் இந்தியா வருகின்றதா

0

ஆடி நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க முடிவெத்துள்ளது. ஆடி A3 e-tron எலக்ட்ரிக் காரினை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.

audi-A3-sportback-e-tron

இந்திய சந்தையில் டீசல் கார் மீதான தற்காலிக தடையை தேசிய பசுமை தீர்ப்பாயம் மிகுந்த அக்கறையுடன் மேற்கொண்டு வருவதனால் வாகன தயாரிப்பாளர்கள் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளனர்.

சமீபத்தில் ஆட்டோகார் புரஃபெஸனல் வணிக பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த இந்தியாவின் ஆடி தலைமை அதிகாரி ஜோ கிங் தெரிவிக்கையில்.. வரும்காலத்தில் இந்திய ஆடி நிறுவனத்தின் கார்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட உள்ளது. மேலும் ஆச்சிரியமூட்டும் வகையில் எலக்ட்ரிக் மாடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியிடப்படவில்லை என்றாலும் ஆடி நிறுவனத்தின் முதல் பிளக் இன் ஹைபிரிட் எலக்ட்ரிக் காரான ஆடி A3 ஸ்போர்ட்பேக் e-tron மாடல் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது.  மின்சார ஆற்றல் மற்றும் 1.4 லிட்டர் TFSI என்ஜின் என இரண்டும் சேர்த்து 206.83hp ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் 940கிமீ வரை பயணிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

 

தற்பொழுது இந்திய சந்தையில் மின்சாரத்தினை கொண்டும் இயங்கும் கார்களாக மஹிந்திரா ரேவா e20 மற்றும் மஹிந்திரா இ-வெரிட்டோ மேலும் ஹைபிரிட் மாடல்களாக  டொயோட்டா பிரையஸ் , கேம்ரி , பிஎம்டபிள்யூ ஐ8 போன்ற மாடல்கள் விற்பனையில் உள்ளது. ஆடி எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அடுத்த சில வருடங்களுக்குள் வரலாம்.

உதவி ; autocarpro