ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்றால் என்ன என்பதற்க்கு தெரிந்து கொள்வதற்கு முன்னால் மேனுவல் டிரான்ஸ்மிஷன் பற்றி அறியலாம்.. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மிக எளிதான பயணத்துக்கு வழி வகுகின்றது.
ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்
ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் 9வது கேள்வி பதில் பக்கத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த கேள்வி அனுப்பியவர் நண்பர் முத்துக்குமார் ஆவார். தங்களின் வாழ்த்துக்கு நன்றி…அவரின் கேள்விக்கான பதில்
மேனுவல் டிரான்ஸ்மிஷன்
மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்பது கியர்களை நாம் க்ளட்ச் துனைக் கொண்டு கியர்களை மாற்றி இயக்குவோம். எஞ்சினில் இருந்து வெளிவரும் ஆற்றலை முறையாக சக்கரங்களுக்கு கடத்த பெரிதும் கியர் பாக்ஸ்கள் உதவுகின்றன.
4 ஸ்பீடு , 5ஸ்பீடு , 6 ஸ்பீடு என மாறுபட்ட வகையில் கியர்பாக்ஸ் இருக்கும்.கிளட்ச் கியர்களை என்கேஜ் மற்றும் டிஸ்என்கேஜ் செய்கின்றது.மேனுவல் டிரான்ஸ்மிஷன் மேம்படுத்தப்பட்ட வகைதான் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகும்.
ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்
ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் கிளட்ச் இல்லாமல் இருக்கும். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வகை CVT மற்றும் செமி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை கொண்டும் இருக்கும்.
வேகத்திற்க்கு ஏற்ப கியர் மாறிக்கொள்ளும் என்பதனால் நமக்கு தேவயற்ற சிரமங்கள் இருக்காது. கிளட்ச் என்பதற்க்கு தனியான பெடல் இல்லை என்பதால் கால்கள் பிரேக் மற்றும் ஆசிலேட்டரியில் மட்டும் பயன்படுத்தினால் போதும்.
ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் டார்க் கன்வர்டர் முக்கிய பங்கு வகிக்கின்றது.
டார்க் கன்வேர்டர் என்பது ஃபுளூயிட் கப்ளிங் ஆகும். எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷனுக்கு இடையில் நிறுவப்பட்டிருக்கும்.
ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்கள் தற்ப்பொழுது பரவலாக அனைத்து நிறுவனங்களும் அறிமுகம் செய்து வருகின்றன. இது மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களை விட ரூ 60000த்திற்க்கு மேல் கூடுதலாக இருக்கும்.
டிராபிக் நிறைந்த பகுதிகளில் கூட மிக எளிதாக பயணிக்கலாம். மேனுவல் டிரான்ஸ்மிஷன் காரில் கூடுதலான மைலேஜ் எதிர்பார்க்கலாம். ஆனால் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்களில் மைலேஜ் குறைவு. மேன்வலை விட சராசரியாக 2 முதல் 5 கீமி வரை குறையலாம்.
பழுது ஏற்பட்டால் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர்களில் அதிக ரூபாய்கள் பிடிக்கும். மேனுவல் டிரான்ஸ்மிஷன் சற்று குறைவாக இருக்கும். அதிகப்படியாக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பழுதுகள் ஏற்படாது.
அதிகப்படியான மன அழுத்தம் இல்லாமல் எந்த சாலையிலும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனியில் பயணிக்கலாம்.
அனைத்து முன்னணி கார் பிராண்டுகளில் பலவிதமான மாடல்களில் டாப் வேரியன்டில் ஆட்டோ டிரான்ஸ்மிஷன் உள்ளது.
2013 ஆம் ஆண்டில் வெளிவந்த குறிப்பின் மேம்பட்ட பதிவாகும்.