இந்தியாவில் இசுசூ நிறுவனம் இலகுரக வர்த்தக வாகனங்கள் மற்றும் எஸ்யூவி கார்களுக்கான ஆலையை தொடங்குகின்றது. ஆந்திரா மாநில அரசுடன் இதற்க்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளது.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இசுசூ நிறுவனம் 2016 ஆம் ஆண்டில் வாகனங்களை தயாரிக்க தொடங்கும். இந்த ஆலையை உருவாக்க ரூ 1500 கோடி முதலீடு செய்ய உள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைக்கின்றனர்.
தற்பொழுது எம்யூ7 எஸ்யூவி மற்றும் டி-மேக்ஸ் பிக் அப் டிரக் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்கின்றனர். இவற்றை 2016யில் இந்தியாவிலே தயாரிக்க உள்ளனர்.
விரைவில் எம்யூ7 எஸ்யூவி மற்றும் டி-மேக்ஸ் பிக் அப் டிரக் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மூலம் அசம்பிளிங் செய்ய உள்ளனர். புதிதாக அமைக்கப்பட உள்ள ஆலை மூலம் வருடத்திற்க்கு 80000 வாகனங்கள் இந்தியாவில் விற்க்கவும். மேலும் 40,000 வாகனங்கள் ஏற்றுமதி செய்ய உள்ளனர்.
இசுசூ எம்யூ7 எஸ்யூவி மற்றும் டி-மேக்ஸ் பிக் அப் டிரக் பற்றி அறிய