இசுசூ எஸ்யூவி மற்றும் பிக் அப் டிரக்

0
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இசுசூ நிறுவனம் இந்தியாவில் MU7 எஸ்யூவி மற்றும் D-மேக்ஸ் பிக்அப் டிரக் என இரண்டு வாகனங்களை களமிறக்கியுள்ளது.

இந்தியளவில் இரண்டு ஷோரூம் மட்டுமே தற்பொழுது தொடங்க உள்ளது. முதல்  ஐந்திராபாத்தில் தொடங்கியுள்ளது மற்றும் கோயம்புத்தூரில் விரைவில் தொடங்க உள்ளனர்.

Google News

இசுசூ  MU7 எஸ்யூவி கார்

ஃபோர்ச்சூனர்,ரெஸ்டான்,என்டோவர் போன்ற கார்களுக்கு சவாலாக இசுசூ   MU7 எஸ்யூவி கார் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசுசூ MU7 எஸ்யூவி கார் என்ஜின் 3 லிட்டர் இன்லைன் 4 சிலிண்டர் ட்ர்போ டீசல் பயன்படுத்தியுள்ளனர்.இதன் சக்தி 161BHP மற்றும் டார்க் 360NM ஆகும்.5ஸ்பீடு மேன்வல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் என இரண்டிலும் கிடைக்கும்.
7 பெரியவர்கள் பயணிக்கலாம். மேலும் சுமைகளை வைக்க போதுமான இடமிருக்கும். பாதுகாப்பு வசதிகள் ABS,TCS,ESP மற்றும் காற்றுப்பைகள் உள்ளன.
இசுஸூ  MU7 எஸ்யூவி கார் விலை 23.75 இலட்சம் ஆகும்.(ex-showroom Hyderabad)
Isuzu MU-7 suv

 D-மேக்ஸ் பிக்அப் டிரக்

 D-மேக்ஸ் பிக்அப் டிரக் டாடாவின் செனான் டிரக்குடன் போட்டியிடலாம். D-மேக்ஸ் பிக்அப் டிரக் ஆனது செவ்ரலே மற்றும் இசுசூ இனைந்து உருவாக்கிய  பிக்அப் டிரக் ஆகும்.
2.5 லிட்டர் கொள்ளவு கொண்ட என்ஜின் ட்ர்போசார்ஜ்டு என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் சக்தி 115HP.
D-மேக்ஸ் பிக்அப் டிரக் விலை 6.87 இலட்சம் மற்றும் 8.09 இலட்சம்.(ex-showroom Hyderabad)
Isuzu D max pickup truck