Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

நம் இதயக்கனி எம்.ஜி.ஆர் – நூற்றாண்டு விழா

by automobiletamilan
January 17, 2017
in Wired, செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

தமிழக மக்களின் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என மக்களால் அழைக்கப்படும்  மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

M.G.R Van

எம்.ஜி இராமச்சந்திரன் அவர்கள் ஜனவரி 17 , 1917 ஆம் வருடம் இலங்கையில் பிறந்தார். நாடங்களில் வாழ்வை தொடங்கிய நமது தலைவர் மக்கள் இதயத்தில் தெய்வமாக டிசம்பர் 24 , 1987 யில் மறைந்தார். 50 வயதினை கடந்த மக்கள் மத்தியில் மட்டுமல்ல எம்ஜிஆர் இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்த வள்ளல் தலைவர் ஆவார்.

எம்.ஜி.ஆர் கார்கள்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தனது தொடக்க காலங்களில் அதாவது 1950 களின் இறுதியிலும் மற்றும் 1960 களின் தொடக்க காலங்களில் டாட்ஜ் நிறுவனத்தின் கிங்ஸ்வே 1957 மாடலை பயன்படுத்தி உள்ளார்.

பிளைமவுத் காரின் ரீபேட்ஜ் மாடலாக டாட்ஜ் கிங்ஸ்வே விற்பனை செய்யப்பட்டது. எம்ஜிஆர் பயன்படுத்திய காரின் எண் – MSX -3157

மேலே குறிப்பிட்ட எம்ஜிஆர் பயன்படுத்திய கார் விபரம் பெரும்பாலும் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் பயன்படுத்திய மற்றொரு ஆஸ்தான கார் மாடலான ஹிந்துஸ்தான் அம்பாசிடார் கார் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.. அதன் எண் TMX -4777 ஆகும். 4777 என்கிற வாகன பதிவெண் இன்றளவும் பெரும்பாலான அவரின் ரசிகர்களின் ராசியான எண்ணாக இருந்து வருகின்றது.

 

எம்.ஜி.ஆர் வேன்

இந்த வேன் குறித்தான போதுமான தகவல்கள் எமது வசம் இல்லையென்றாலும் பொன்மனச் செம்மல் அவர்கள் அரசியல் பிரசார வேன் எண் TN W- 2005 ஆகும். தற்பொழுது இந்த வேனை கேப்டன் விஜயகாந்த் பராமரித்து வருகின்றார்.

 

 

பட உதவி – wikimedia commons ,  mgrroop.blogspot.in , விகடன்

Tags: குறிப்புகள்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Refresh
Go to mobile version