இந்தியாவின் முதல் ஓட்டுனரில்லா கார் – டாடா நானோ

இந்தியாவின் கார் அடையாளங்களில் ஒன்றான டாடா நானோ காரில் டிரைவரில்லாமல் இயங்கும் வகையில் தானியங்கி காராக கேரளாவைச் சேர்ந்த  Dr. ரோஸி ஜான் குழு உருவாக்கியுள்ளது. இந்தியாவின் முதல் ஓட்டுனரில்லா கார் என்ற பெருமையை நானோ பெற்றுள்ளது.

Tata Nano genx  new

உலகயளவில் பரவலாக ஆட்டோமொபைல் துறையில் முன்னனி வகிக்கும் பல நிறுவனங்கள் தானியங்கி கார் சோதனையை பரவலாக நடத்தி வருகின்றது. அடுத்த சில வருடங்களில் ஓட்டுனரில்லா கார்கள் பல வெளிநாடுகளில் சந்தைக்கு வரும் நிலையை எட்டியுள்ளது.

கொச்சியில் உள்ள டாடா கன்ஸ்ல்டன்சியில் ரோபோட்டிக்ஸ் துறையில் பணியாற்றும் Dr. ரோஸி அவர்கள்  ஒருமுறை இரவில் விமான நிலையம் செல்ல காரில் சென்றபொழுது எதிர்பாராத வகையில் ஓட்டுநர் கட்டுபாட்டினை இழந்தார் மேலும் அன்றாட வாகன நெரிசல் அதிகரித்து வருவது மிக கடினமாக இருப்பதனால் பல வெளிநாடுகளில் தானியங்கி காருக்கான சோதனை நடத்துவதனை போல நாமும் உருவாக்காலாம் என்ற முயற்சியை கையிலெடுத்துள்ளார்.

இந்திய சந்தையில் எண்ணற்ற கார்கள் விற்பனையில் உள்ள நிலையில் எந்த காரினை தேர்தெடுக்கலாம் என பல சிந்தனைக்கு பிறகு டாடா நானோ காரை தேர்ந்தெடுத்துள்ளார். மெனுவல் டிரான்ஸ்மிஷனில் மட்டுமே விற்பனைக்கு வந்த நானோ தற்பொழுது ஏஎம்டி ஆப்ஷனை பெற்றுள்ளது. சிமிலேஷன் முறையில் தானியங்கி கியர்பாக்சினை வடிவமைத்து , பின்பு மாடுலர் கிட் வழியாக ஆக்சூவேட்டர் , கேமரா மற்றும் சென்சார்கள் துனையுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தொடக்கநிலை சோதனையில் உள்ள காரின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  எதிர்பாராத நிலையில் தானியங்கி சிஸ்டம் வேலை செய்யாமல் போனால் பின் இருக்கையில் உள்ளவர்களும் பிரேக்கினை இயக்க முடியும்.