இந்தியாவில் டிஎஸ்கே- ஹயோசங் 125சிசி-150சிசி பைக்

0
டிஎஸ்கே-ஹயோசங் நிறுவனம் இந்தியாவில் பிரிமியம் பைக்களை விற்பனை செய்து வருகின்றது. அதிகம் விற்பனையாகும் பைக்கள் 125 முதல் 150 சிசி பைக்களாக இருப்பதனால் இந்த சந்தையினை குறிவைத்து பைக்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

டிஎஸ்கே மோட்டோவில் ஹயோசங் அசெம்பிளிங் ஆலை புனேவில் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆலையில் 250சிசி முதல் 650 சிசி பைக்கள் அசெம்பிள் செய்யப்படுகின்றது.

ஹயோசங் பைக்

டிஎஸ்கே ஹயோசங் என்ற பெயரில் தயாரிக்கப்பட உள்ள 125சிசி-150சிசி பைக்கள் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றமதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.  இதற்க்கான ஆலையை மஹாராஷ்ட்ராவில் அமைக்க 100 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த உள்ளனர்.

Google News

ரூ 300 முதல் 350 கோடிவரை முதலீடு செய்ய உள்ளதாகவும் இந்த ஆலை மிக நவீனமயமாகவும் ஆட்டோமேட்டிக் நிறுவனமாகவும் இருக்கும் என டிஎஸ்கே-ஹயோசங் நிர்வாக இயக்குனர் சிரிஷ் குல்கர்னி தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாடு முழுவதும் 25 டீலர்களை டிஎஸ்கே-ஹயோசங் கொண்டுள்ளது. 2013க்குள் மேலும் 10 ஷோரூம்களை திறக்க உத்தேசித்துள்ளது.

தற்பொழுது இந்தியாவில் விற்பனையில் உள்ள ஹயோசங் மாடல்கள்

ஹயோசங் ஜிடி 250ஆர் ரூ 2.80 இலட்சம்

ஹயோசங் ஜிடி 650ஆர் ரூ 4.87 இலட்சம்

எஸ்டி-7 குரூஸர் பைக் ரூ 5.89 இலட்சம்

ஜிடி 650என் ரூ 3.94 இலட்சம்

அக்யுல்லா புரோ ரூ 5.08 இலட்சம்