இந்தியா டிசைன் விருது வென்ற யமாஹா ரே

0
யமாஹா நிறுவனத்தின் மிக பிரபலமான ஸ்கூட்டர் ரே இந்தியன் டிசைன் மார்க் 2013 விருதினை வென்றுள்ளது. சிறப்பான டிசைன்களுக்கு இந்தியா டிசைன் கவுன்சில் மூலம் வழங்கப்படுகின்றது.

இந்த விருதிற்க்கான தேர்வுமுறை ஆனது வடிவமைப்பு, நிலைப்பு தன்மை, தரம்,செயல்பாடு, தோற்றம், சிறப்பான உருவாக்கம் போன்ற காரானிகளை மையமாக வைத்து இந்தியா டிசைன் கவுன்சில் வழங்குகின்றது. 
இந்தியா டிசைன் மார்க் விருது இந்தியாவின் டிசைன் கவுன்சில் மற்றும் ஜப்பான் இன்ஷடியூட் ஆஃப் டிசைன் பிரோமோஷன் கூட்டனியில் வழங்கப்பட்டுள்ளது.
யமாஹா ரே ஸ்கூட்டர்
மிக அழகான நேர்த்தியான வடிவமைப்பினை கொண்ட யமாஹா ரே ஸ்கூட்டர் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இதனால் விற்பனை மிக சிறப்பாகவே உள்ளது.  இந்தியன் டிசைன் மார்க் விருதினை இரண்டாம் முறையாக யமாஹா வென்றுள்ளது. கடந்த ஆண்டு YZF-R15 பைக்கிற்க்காக வென்றது
யமாஹா ரே ஸ்கூட்டர் பற்றி படிக்க