இந்திய கார்கள் பாதுகாப்பானதா ? – Global NCAP

மே 17 , 2016யில் அதாவது நாளை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 7 கார்கள் பாதுகாப்பான இந்திய  கார்கள் என்ற பெயரில் சர்வதேச கிராஷ் டெஸ்ட் அமைப்பின் சோதனை முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. 7 கார்களில் ரெனோ க்விட் காரும் ஒன்றாகும்.

Honda-BR-V-crash-test
படம் ; ஹோண்டா பிஆர்-வி கிராஷ் டெஸ்ட்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக சர்வதேச கிராஷ் டெஸ்ட் அமைப்பு ( Global new car assessment programme – Global NCAP ) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5 கார்களை சோதனை செய்தது. ஆனால் 5 கார்களில் ஒன்றுகூட தேர்ச்சி பெறாமல் பெரியவர்களின் பாதுகாப்பில் பூஜ்யம் நட்சத்திர மதிப்பீட்டினை பெற்றது.  மாருதி ஆல்ட்டோ 800 , ஹூண்டாய் ஐ10 , ஃபோர்டு ஃபிகோ , டாடா நானோ மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ ஆகும். இவற்றில் எந்த காரும் அடிப்படை வேரியண்டில் எவ்விதமான நட்சத்திர மதிப்பீடினையும் பெறவில்லை.

ஃபோக்ஸ்வேகன் போலோ கார்  இரட்டை காற்றுபைகள் கொண்ட மாடல் 4 நட்சத்திர மதீப்பிட்டினை பெற்றது. எனவே உடனடியாக ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தன்னுடைய போலோ காரின் அனைத்து வேரியண்டிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகளை நிரந்தரமாக்கியது. மற்ற நிறுவனங்கள் உடனடியாக பெரிதாக கவனத்தில் கொள்ளவில்லை.  மேலும் மற்றொரு பட்ஜெட் பிராண்டான நிசான் டட்ஸன் பிராண்டின் கோ காரில் காற்றுப்பை சேர்க்கப்பட்டாலும் பாதுகாப்பாக இருக்காது என குளோபல் என்சிஏபி தெரிவித்திருந்தது.

தற்பொழுது விற்பனைக்கு வந்துகொண்டிருக்கும் அனைத்து புதிய கார் மாடல்களிலும் பெரும்பாலும் முன்பக்க இரு காற்றுப்பைகள் ஆப்ஷனலாக பேஸ் வேரியண்டில் கூட சேர்க்கப்படுகின்றது.

இரு வருடங்களுக்கு பிறகு மீண்டும் 7 கார்களை கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு எடுத்துள்ள கார்களை எவை என தெரியவில்லை. இதில் ஒரு கார் மிக விரைவாக பிரசத்தி பெற்ற ரெனோ க்விட் இருப்பதாக கூறப்படுகின்றது என ஆட்டோகார் புராஃபெஸனல் செய்தி வெளியிட்டுள்ளது.