பிரசத்தி பெற்ற டொயோட்டா இனோவா காரின் புதிய இனோவா கிறிஸ்டா காரை அடிப்படையாக கொண்ட கூடுதல் வசதிகளை பெற்ற டூரிங் ஸ்போர்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
இனோவா கிறிஸ்டா டூரிங் ஸ்போர்ட்
- இந்தோனசியா சந்தையில் இனோவா வென்ச்சுரர் என அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடலை அடிப்பையாக கொண்டதே டூரிங் ஸ்போர்ட் மாடலாகும்.
- பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் டாப் ZX வேரியன்டில் மட்டுமே கிடைக்கலாம்.
- சாதாரன மாடலை விட ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை விலை கூடுதலாக அமைந்திருக்கும்.
இந்திய எம்பிவி ரக சந்தையில் பல ஆண்டுகளாக முடிசூடா மன்னாக விளங்கும் இனோவா காரில் 150hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.4லிட்டர் என்ஜின் டார்க் 343 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 2.4 லிட்டர் இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 15.10 கிமீ ஆகும்.
174hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் என்ஜின் டார்க் 360 Nm ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் இடம் பெற்றிருக்கும். 2.8 லிட்டர் இன்னோவா க்ரீஸ்ட்டா மைலேஜ் லிட்டருக்கு 14.29 கிமீ ஆகும்.
166 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் டார்க் 245Nm ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
மொத்தம் மூன்று விதமான என்ஜின் தேர்வுகளில் கிடைக்கின்ற கிறிஸ்டாவின் டாப் வேரியன்ட் என்ஜின் 2.7 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் ஆப்ஷனை அடிப்படையாக கொண்ட டூரிங் ஸ்போர்ட் மாடலில் தோற்ற அமைப்பில் கருப்பு நிற அலாய் வீல் , பாடி கிளாடிங் போன்ற கூடுதலான வசதிகளை பெற்றதாகவும் , இன்டிரியரில் கவர்ச்சிகரமான வண்ணங்களை பெற்றதாகவும் விளங்கும்.
அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற 6 இருக்கைகள் கொண்ட டூரிங் ஸ்போர்ட் பிரிமியம் ரக அனுபவத்தை கூடுதலாக வழங்கும் வகையில் அமைந்திருக்கும்.
*கொடுக்கப்பட்டுள்ள படங்கள் இன்னோவா வென்ச்ரர் இந்தோனசியா மாடலாகும்.