இளைஞர்களின் இதயதெய்வம் – அப்துல் கலாம்

0

தமிழர்களின் பெருமையை உலகயறிய செய்த மாபெரும் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் உடல் நம்மை விட்டு பிரிந்தாலும் ஒவ்வொரு இளைஞர்களின் இதயத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

kalam

மிகவும் வறுமை மிக்க குடும்பத்தில் பிறந்தாலும் கல்வி மீது கொண்ட பற்றால் இந்திய குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்த பெருமைமிகு தமிழன் ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் ஆவார்.

Google News

இளைஞர்களின் இதயதெய்வம்

தனது கல்வி பருவத்தில் பறவைகள் எவ்வாறு பறக்கின்றது என்பதனை பாடம் எடுத்த ஆசிரியரிடம் புரியவில்லை என்று தெரிவித்த கலாம் இன்று உலக அரங்கில் இந்தியாவின் ஏவுகணை திறனை உலகிற்கு  உணர்த்தியவர்.

Kalam Quote

முன்னனி ஏவுகணைகளான அக்னி , பிருத்திவி போன்றவற்றின் தயாரிப்பில் முக்கிய பங்குவகித்தவர்.

ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் கொண்டிருந்த அப்துல் கலாம் மாற்று எரிபொருளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் தன்னை புதை படிவ எரிபொருளுக்கு எதிரானவன் என கூறினார். புதை படிவ எரிபொருள்கள் புதுப்பிக்க முடியாது என்பதால் அவற்றுக்கு எதிரானவர் என தெரிவித்தார்.

abdul kalam

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றான எரிபொருளுக்கு ஹைபிரிட் முறையில் 60 சதவீத பெட்ரோல் அல்லது டீசல் மற்றும் 40 சதவீத நீர் கொண்டு இயங்கும் வகையில் மாற்று எரிபொருள் தயாரிக்க ஆலோசனை கூறினார்.

மேலும் இலகு எடை மற்றும் உறுதியான தரம் கொண்ட காம்போசிட் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாகனங்களை வடிவமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

3 கிலோ எடை கொண்ட செயற்கை கால் காம்போசிட் இபோக்சி என்ற பொருளை கொண்டு 300 கிராம் இலகு எடையில் வடிவமைத்ததை தன் வாழ்நாளில் மிக பெரும் ஆனந்தமாக கருதியவர்.

உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவின்  அணு ஆயுத வலிமையை உலகிற்கு சோதனை செய்து காட்டியவர். தனது 74 வயதில் 10 வயது கனவை  1200 கிமீ வேகத்தில் பயணிக்கும் சுகோய் 30 – எம்கேஐ போர் விமானத்தில் 36 நிமிடங்கில் பயணித்த இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் என்ற பெருமைக்குரியவர்.

போர் விமானியாக ஆசைப்பட்டு வாழ்க்கையை தொடங்கிய அப்துல் கலாம் போர் விமானத்தினை வடிவமைத்தார்.

abdul kalam

அக்னி சிறகுகள்  என்றும் சாம்பல் ஆவதில்லை………………..இது முடிவல்ல புது வடிவமே……………

குறிப்பு; 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த பதிவு மீள்பதிவு  செய்யப்பட்டுள்ளது..