உலகம் சுற்ற ரூ.21 லட்சத்தில் ஈகிள்ரைடர்- #BigMotorCycleRide

ஈகிள்ரைடர் நிறுவனம் இந்தியாவில்  பிக் மோட்டார்சைக்கிள் ரைட் என்ற பெயரில் பிரிமியம் மோட்டார்சைக்கிளின் வாயிலாக டெல்லி டூ லண்டன் பயண திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 16 நாடுகள் பயணிக்க ரூ.21 லட்சம் மட்டுமே.

அமெரிக்காவின் ஈகிள்ரைடர் நிறுவனம் இந்தியாவில் டெல்லியில் அமைந்துள்ளது. பிரிமியம் மோட்டார்சைக்கிள்கள் அனுபவத்தை பெறும் வகையிலான நோக்கத்தை கொண்டு செயல்படும் ஈகிள்ரைடர் ஹார்லி டேவிட்சன் பைக்குள் மேலும் பல பிரிமியம் நிறுவன மோட்டார்சைக்கிளை வாடைக்கு விட்டுவருகின்றது.

தங்களுடைய 25வது ஆண்டுவிழா கொண்டாடத்தை முன்னிட்டு இந்திய வாடிக்கையாளர்களுக்காக 16 ரைடர்கள் ,  16 நாடுகள் , 66 நாட்களில் பயணிக்கும் வகையிலான  பிக் மோட்டார்சைக்கிள் ரைட் பயணத்தை அறிவித்துள்ளது. இந்த பயண திட்டத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் ரூ.21 லட்சம் செலுத்தி இந்த பயண திட்டத்தில் இணைந்துகொள்ளலாம்.

 பிக் மோட்டார்சைக்கிள் ரைட் விபரங்கள்

  • 12-12-2016 முதல் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
  • 16 ரைடர்கள் , 16 நாடுகள் ,66 நாட்கள் என மொத்த கட்டணம் ரூ.21 லட்சம் (அனைத்தும்)
  • ரூ.21 லட்சம் கட்டணத்தில் பயணிக்க மோட்டார்சைக்கிள் , டெல்லி திரும்பி வர விமான டிக்கெட் , உணவு ,உறைவிடம் ,ரைடிங் கியர் , மெடிக்கல் சப்போர்ட் , அனைத்து விதமான பெர்மீட் மற்றும் லைசென்ஸ் , சேஸ் வேன் , காப்பீடு (ரைடர் & மோட்டார்சைக்கிள்) , எரிபொருள் ,  ஸ்பேர் மற்றும் சர்வீஸ் என அனைத்தும் அடங்கும்.
  • பயணம் தொடங்கும் நாள் 15-6-2017 நிறைவு நாள் 19-8-2017
  • முன்பதிவு செய்து கொள்ள www.eagleriderindia.com/wp/bigmotorcycleride/

#BigMotorCycleRide route:  

New Delhi – Nepal – Bhutan – Myanmar –China– Mongolia– Russia– Kazakhstan – Russia – Latvia– Lithuania– Poland – Germany – Netherlands – Belgium – France – United Kingdom

மேலும் விபரங்களுக்கு ; www.eagleriderindia.com

 

 

Recommended For You