உங்கள் வாகனம் உங்கள் விமர்சனம்- அட்டகாசமான வரவேற்ப்பு

உங்கள் வாகனம் உங்கள் விமர்சனம் புதிய பகுதிக்கு ஆதரவு மிக சிறப்பாக கிடைத்துள்ளது. இதனை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதற்க்கு சில வழிமுறைகளை உங்கள் ஆதரவுடன் உருவாக்க திட்டமிட்டுள்ளேன்.

ஆட்டோமொபைல்

புதிதாக கார், பைக் மற்றும் வர்த்தக வாகனங்கள் என வாங்க விரும்புபவர்களுக்கு  சிறப்பான முறையில் இந்த பகுதி உதவ வேண்டும் என்பதில் மிக தெளிவாக உள்ளேன்.

எந்த வாகனமாக இருந்தாலும் சில முக்கியமான காரணிகளை கவனத்தில் கொள்வது மிக அவசியம்.
வாகனத்தின் விமர்சனம்  எவ்வாறு இருக்க வேண்டும்..
 தற்பொழுது விற்பனையில் உள்ள வாகனங்களை நீங்கள் பயன்படுத்தி வந்தால் உங்கள் அனுபவத்தினை பகிரந்து பலர் அறிய உதவுங்கள்..
தனி பதிவாக எழுத விருப்பம் என்றால் கீழுள்ளவற்றை கவனத்தில் கொண்டு உங்கள் பதிவினை பதிய வாருங்கள் தனி பதிவிற்க்கு தொடர்புக்கு 

1. வாகனத்தின் தோற்றம்(Style)
2.இடவசதி
3.என்ஜின்
4. ஓட்டுதல்,கையாளுதல் மற்றும் ப்ரேக்
5.மைலேஜ்
6. வாகனத்தின் சிறப்பம்சங்கள்
7. உங்கள் மதிப்பெண்(எ.கா 8/10)
8. உங்கள் பார்வையில் வாகனத்தின் செயல்திறன்
9. மொத்த மதிப்பு
10.சர்வீஸ்
11.பரிந்துரை

தனி பதிவிற்க்கு தொடர்புக்கு 
கருத்துரையில் உங்கள் விமர்சனத்தையும் பதிவு செய்யுங்கள்.. அவற்றை தொகுத்து தனி பதிவாகவும் வெளியிடலாம்.. 
இந்த வாரம் ஹீரோ பைக் பற்றி கருத்துரை வெளியிடுங்கள்…
முந்தைய அறிவிப்பினை கான https://automobiletamilan.com/gred/2013/02/readers-review-in-tamil.html
இந்த பகுதியின் நோக்கம் வாகனங்களின் நிறைகுறைகளை அனுபவத்தின் மூலம் பலர் அறிய செய்வதே ஆகும். புதிய கார்,பைக் வாங்குபவர்களுக்கான அட்டகாசமான தொகுப்பாக இருக்கும்.
பலர் அறிய செய்யுங்கள்…பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்கள் வாகன விமர்சனமும் தமிழர் உலகம் அறியட்டும்………