நாம் பயன்படுத்தும் ஹெல்மெட் நம்மை பாதுகாக்குமா ? தலைக்கவசம் அனிந்தும் பாதுகாப்பு இல்லை ஏன் ?  தலைக்கவசம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் …
 

தலைக்கவசம் பாதுகாப்பு இல்லையா

தலைக்கவசம் கடமைக்கு அணியும் பலரை நாம் நேரடியாகவே பார்க்க முடியும் குறிப்பாக தலைக்கவசம் அணிந்தாலும் பக்ல்ஸ் அணிவதில்லை , மிகவும் விலை மலிவான தரமற்ற தலைகவசத்தினை பயன்டுத்துவது என பல காரணங்களால் தலைக்கவசம் அணிந்தாலும் பாதுகாப்பற்றதாக உள்ளது.

அரை ஹைல்மெட் Vs முழு ஹைல்மெட்

அது என்ன அரை தலைக்கவசம் , முழு தலைக்கவசம் தெரிந்து கொள்ளலாமா ?

முகத்தினை முழுதாக மறைக்காத தலைகவசத்தினை பரவலாக பயன்படுத்துவது அதிகரித்து வருகின்றது. இது மிகவும் தவறான தலைக்கவசம் தேர்ந்து எடுத்துள்ளார்கள் என்பதனை கீழுள்ள படத்தின் மூலம் அறியலாம்.

விபத்தில் சிக்கினால் அதிகம் பாதிப்படையும் தலைக்கவசத்தின் பகுதிகளை கீழுள்ள படத்தில் காணலாம்.
 

தலை மற்றும் தாடையை வரை முழுமையாக கவர் செய்யும் தலைக்கவசத்தினை பயன்படுத்துங்கள். முழுமையான கவசத்தினை அணிவதன் மூலம் உங்கள் அழகான முகத்தினை பாதுகாக்க முடியும்.

சில முக்கிய அம்சங்களை படங்களில் கானலாம்.

 
தலைக்கவசம் ஐஎஸ்ஐ முத்திரை
ஹைல்மெட்டில் ஐஎஸ்ஐ முத்திரை அவசியம் இருக்க வேண்டும். அதைவிட முக்கியம் சரியான ஐஎஸ்ஐ முத்திரையா என அறிந்து கொள்வது. இதனை அறிய www.bis.org.in இணையத்தினை பார்க்கலாம்.