உலகின் அதிக மைலேஜ் தரும் பைக் ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட்

உலகின் அதிக மைலேஜ் தரும் பைக் என்ற பெயரினை ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக் பெற்றுள்ளது. ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 102.5கிமீ ஆகும்.

 ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட்

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக்கில் மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை தரக்கூடிய 97.2சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் மார்ச் 2015யில் எடுக்கப்பட்ட புதிய ஐசிஏடி சோதனைகளின் படி ஐடில் நிலையில் 102.5கிமீ மைலேஜ் தருகின்றதாம்.

மத்திய அரசின் International Centre for Automotive Technology (iCAT) விதிகளின்படி நடத்தப்பட்ட சமீபத்திய சோதனையில் ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக்கினை மாசு வெளிப்பாடு மற்றும் எரிபொருள் சிக்கனம் போன்றவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஐடில் சோதனையில் இந்த மைலேஜ் கிடைத்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிக அதிகப்படியான மைலேஜ் தரக்கூடிய பைக்குகளுக்கு இந்திய சந்தையில் என்றுமே பிரகாசமான விற்பனை வாய்ப்புகள் உள்ளதை அறிவோம் ஸ்பிளென்டர்  பிராண்டின் மதிப்பின் மூலம் ஊரக சந்தையில் மிக பிரமாண்டமான வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.