உலகின் விலை உயர்ந்த கார் டயர் – கின்னஸ் சாதனை

தூபாய் நாட்டின் இசட் டயர்ஸ் நிறுவனம் உலகின் விலை உயர்ந்த ஒரு செட் கார் டயரை 2.2 மில்லியன் திர்ஹம் (இந்திய மதிப்பில் ரூ.4.01 கோடி) விலையில் சமீபத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  உலகின் விலை உயர்ந்த ஒரு செட் கார் டயர் என்ற பெயரில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Z-tyres-gold-platted-tyre

துபாய் நாட்டினை இசட் டயர்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள இசட் 1 ஸ்போர்ட்டிவ் டயரில் 24 காரட் தங்கம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வைரங்களை கொணு வடிவமைக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள புதிய ஜனாதிபதி மாளிகையை வடிவமைத்த அதே பொற்கொல்லரை கொண்டு இந்த டயர் உருவாக்கப்பட்டுள்ளது.

கோல்ட் பிளேட் பதிக்கப்பட்ட இந்த டயர்கள் விற்பனையில் கிடைத்த தொகையினை ஜென்சியஸ் என்ற தொண்டு அமைப்புக்கு இசட் டயர் வழங்கியுள்ளது. ஜென்சியஸ் ஃபவுண்டேஷன் அமைப்பினை இசட் டயர் குழுமத்தி அங்கமாகும். பெயர் குறிப்பிடபடாதா நபர்க்கு இந்த கோல்ட் டயர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

விற்பனையில் உள்ள சொகுசு கார்களை மிஞ்சும் வகையிலான விலையில் தங்க கார் டயர் அமைந்துள்ளது.

Z-tyres-gold-platted-tyre-guinness-records

Z-tyres-gold-tyre