எச்எம் நிறுவனத்துடன் இசுசூ ஒப்பந்தம்

0
இசுசூ நிறுவனம் ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செய்படும் மிக பிரபலமான எஸ்யூவி மற்றும் பிக்அப் வாகனங்களின் தயாரிப்பாளராகும். இந்தியாவின் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்  நிறுவனத்துடன் இனைந்து செயல்பட்டு வருகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன் எம்யூ7 எஸ்யூவி மற்றும் டிமேக்ஸ் பிக்அப் டிரக்கை இந்தியாவவில் முழுதும் கட்டமைக்கப்பட்ட வாகனமாக விற்பனை செய்து வருகின்றது. இந்தியாவில் ஹைந்திராபாத் மற்றும் கோவையில் மட்டுமே டீலர்களை கொண்டுள்ளது.

இசுசூ எம்யூ7 எஸ்யூவி

எச்எம் மற்றும் இசுசூ நிறுவத்துடன் ஏற்பட்டுள்ள ஒப்பந்தமானது. இசுசூ வாகனங்களின் பாகங்களை தாய்லாந்தில் உள்ள இசுசூ ஆலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள எச்எம் ஆலையில் அசெம்பிள் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

இசுசூ மோட்டர்ஸ் பிரிஷிடென்ட் தக்காசி க்கிச்சூ கூறுகையில் இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்பினை நாங்கள் பெருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. முன்பு அறிமுகம் செய்யப்பட்ட எம்யூ7 எஸ்யூவி மற்றும் டிமேக்ஸ் பிக்அப் என இரண்டும் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.

 ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் எம்டி மற்றும் சிஇஒ உத்தம் போஸ் கூறுகையில் இசுசூ நிறுவனத்தின் சிறப்பான நுட்பம் எச்எம் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் இந்தியாவின் பொருளாதரத்துக்கும் பக்கபலமாக அமையும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் எச்எம் சிறப்பான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது.

இசுசூ டிமேக்ஸ்