எந்த டீசல் செடான் கார் வாங்கலாம்- கேள்வி பதில்

0
ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் கேள்வி பதில் 8வது கேள்வியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியே… இந்த கேள்வி ஆனது முன்பு வெளிவந்த எந்த டீசல் கார் வாங்கலாம் என நண்பர் பிரசன்னா கேட்ட கேள்வியின் தொடர்ச்சியாக நண்பர் செந்தில்குமார் அவர்களின் டீசல் பிரிவில் எந்த செடான் கார் வாங்கலாம் என்பதே ஆகும். அவர் கேட்ட கேள்வி இதுதான்.

automobile sedan

7 இலட்சம் முதல் 9 இலட்சம் வரை செடான ரக டீசல் கார்களின் கானலாம். மேலும் இப்பொழுது வரும் அனைத்து டாப் வேரியன்டிலும் ஏபிஎஸ்,பார்க்கிங் சென்ஸார், காற்றுப்பைகள், பிரேக் அசிஸ்ட் போன்ற வசதிகள் வருகின்றன. ஆனால் விலை சற்று கூடுதலாக இருக்கும்.

1.  டாடா இன்டிகோ Ecs

டாடா இன்டிகோ Ecs காரின் மைலேஜ் 25kmpl ஆகும். இதன் சக்தி 70PS மற்றும் டார்க் 140NM ஆகும். டாடா இன்டிகோ Ecs VX இன்டிகோ காரில் உச்சகட்ட மாறுபட்ட வகையாகும். இந்த காரில் ABS உள்ளது ஆனால் பார்க்கிங் சென்ஸார் மற்றும் காற்றுப்பைகள் கிடையாது.

Tata Indigo

மைலேஜ் வகையில் இதன் செயல்பாடு சிறப்பு மற்றும் விலையும் குறைவு.

இதன் விலை 6,25,165 ஆகும்.

2. டோயோட்டோ எடியாஸ் டீசல்

டோயோட்டோ எடியாஸ் டீசல் காரின் மைலேஜ் 23.5kmpl ஆகும்.இதன் சக்தி 90PS மற்றும் டார்க் 132NM ஆகும். டோயோட்டோ எடியாஸ் VXD எடியாஸ் காரில் உச்சகட்ட மாறுபட்ட வகையாகும். இந்த காரில் ABS, டிரைவர் காற்றுப்பைகள் பேஸன்ஜர் காற்றுப்பைகள் உள்ளது ஆனால் பார்க்கிங் சென்ஸார் மற்றும் சைடில் காற்றுப்பைகள் கிடையாது.

Toyota Etios Diesel

அசத்தலான தோற்றம், இடவசதி, சிறப்பான மைலேஜ் உள்ள காராகும்.

இதன் விலை 8,40,608 ஆகும்.

3.  நிசான் சன்னி டீசல்

நிசான் சன்னி டீசல் காரின் மைலேஜ் 21.4kmpl ஆகும்.இதன் சக்தி 90PS மற்றும் டார்க் 132NM ஆகும். நிசான் சன்னி டீசல் XV மற்றும் ஸ்பெஷல் எடிசன் சன்னி  காரில் உச்சகட்ட மாறுபட்ட வகையாகும். இந்த காரில் ABS, டிரைவர் காற்றுப்பைகள் பேஸன்ஜர் காற்றுப்பைகள் உள்ளது. ஆனால் பார்க்கிங் சென்ஸார் மற்றும் சைடில் காற்றுப்பைகள் கிடையாது.

nissan sunny
இதன் ஸ்பெஷல் எடிசன் சன்னி  விலை 9,67,800 மற்றும் நிசான் சன்னி டீசல் XV   9,12,581 ஆகும்.

4. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டிசையர்

ஸ்விஃப்ட் டிசையர் டீசல் காரின் மைலேஜ் 23.4kmpl ஆகும்.இதன் சக்தி 74PS மற்றும் டார்க் 190NM ஆகும். ஸ்விஃப்ட் டிசையர் டீசல் ZDI டிசையர்  காரில் உச்சகட்ட மாறுபட்ட வகையாகும். இந்த காரில் ABS, டிரைவர் காற்றுப்பைகள் பேஸன்ஜர் காற்றுப்பைகள் உள்ளது. ஆனால் பார்க்கிங் சென்ஸார் மற்றும் சைடில் காற்றுப்பைகள் கிடையாது.

swift dzire

அசத்தலான தோற்றம்,சிறப்பான மைலேஜ் உள்ள காராகும்.< br />

இதன் விலை 7,58,433 ஆகும்.

5. ஃபோர்டு ஃபியஸ்டா டீசல்

ஃபியஸ்டா  டீசல் காரின் மைலேஜ் 23.5kmpl ஆகும்.இதன் சக்தி 74PS மற்றும் டார்க் 190NM ஆகும். ஃபியஸ்டா  டீசல் டைட்டானியம் ப்ளஸ் காரில் உச்சகட்ட மாறுபட்ட வகையாகும். இந்த காரில் பார்க்கிங் சென்ஸார், ABS, டிரைவர் காற்றுப்பைகள் பேஸன்ஜர் காற்றுப்பைகள் உள்ளது. ஆனால்  மற்றும் சைடில் காற்றுப்பைகள் கிடையாது.

Ford Fiesta
இதன் விலை 10,44,931 ஆகும்.

மேலும் சில சிறப்பான மைலேஜ் கார்

மாருதி Sx4 டீசல் – மைலேஜ் 21.5 km/lit, 1248 cc engine 90 BHP power.

டாடா மான்ஸா டீசல் – மைலேஜ்  21.02 km.lit, 1.3 Lit engine 90 BHP Power

ஃபோக்ஸ்வேகன் வேன்டோ – மைலேஜ் 20.54, 1600 CC engine 105 BHP power.

 ஸ்கோடா ரேபிட்; மைலேஜ் 20.54, 1600 CC engine delivering 105 BHP power.

 ஹூன்டாய் ஃப்ளூடிக் வேர்னா 1.4 -மைலேஜ் 23.5 km/lit, 1.4 Lit engine  90 BHP power. 
வேர்னா 1.6 – 128 BHP Power &மைலேஜ் 22.32 Kmpl.

* விலை விபரங்கள் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை ஆகும்