எந்த பைக் வாங்கலாம் கிளாமர் vs சல்யூடோ – Auto Tamil Q&A

ஹீரோ கிளாமர் மற்றும் யமஹா சல்யூடோ என இந்த இரண்டு பைக்கில் எந்த பைக் வாங்கலாம் என்ற கேள்விக்கு பதிலாக இந்த செய்தி தொகுப்பினை கானலாம்.
கிளாமர்  vs சல்யூடோ
கிளாமர்  vs சல்யூடோ

இரண்டுமே 125சிசி மார்கெட்டில் இருக்கும் சிறப்பான பைக்காகும். சல்யூடோ பைக்கை விட கிளாமர் சற்று கூடுதலான விலையில் இருந்தாலும் கிளாமர் விற்பனையிலும் சந்தையிலும் முன்னிலை விகிக்கின்றது. அதாவது விற்பனையில் முதல் 10 இடங்களில் இடம் பெற்று வருகின்றது.
நம் வாசகர் லோகேஷ் கேட்டிருந்த கேள்வி இதோ….
தோற்றம்

புதிய ஹீரோ கிளாமர் மார்கெட்டில் வந்த சில காலம் ஆகிவிட்டது , சல்யூடோ புதிய மாடலாக சில மாதங்களுக்கு முன்புதான் சந்தையில் வந்துள்ளது.  தோற்றத்தில் இரண்டுமே சிறப்பான பொலிவுடன் கவர்கின்றது. சல்யூடோ பைக்கை விட கூடுதலான ஸ்டைலிங் அமைப்பினை பெற்று கிளாமர் விளங்குகின்றது.

என்ஜின்
ஹீரோ கிளாமர் பைக்கில் 9.1பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 124.7சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 10.5என்எம் ஆகும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது. ஹீரோ கிளாமர் பைக்கில் Fi மாடலும் உள்ளது.
 யமஹா சல்யூடோ பைக்கில் 8.1பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 125சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதன் டார்க் 10.1என்எம் ஆகும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது. சிறப்பான மைலேஜ் தரவல்ல பூளூ கோர் நுட்பத்தினை பெற்றுள்ளது.
மைலேஜ் 
ஹீரோ கிளாமர் பலதரபட்ட வாடிக்கையாளர்களின் அனுபவத்தின் வாயிலாக கிடைத்துள்ள சராசரி மைலேஜ் லிட்டருக்கு 67கிமீ முதல் 71கிமீ வரை கிடைக்கின்றது.
யமஹா சல்யூடோ பைக்கின் தரச்சான்றிதழ் மைலேஜ் லிட்டருக்கு 78கிமீ ஆகும்.  
பிரேக்

கிளாமர் மற்றும் சல்யூடோ என இரண்டிலும் பைக்கில் டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாகவும் கிடைக்கின்றது. இரண்டுமே சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்துகின்றது.
சஸ்பென்ஷன்
இரண்டிலும் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும் , பின்பக்கத்தில் சல்யூடோ பைக்கில் ஸ்விங் ஆர்ம் சாக் அப்சார்பர்களும் , கிளாமர் பைக்கில்  ஸ்விங் ஆர்ம உடன் இணைந்த ஹைட்ராலிக் சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது.
கையாளும் தன்மை
கிளாமர் பைக் மிக சிறப்பான கையாளும் திறனை பெற்று மிக சிறப்பாக உள்ளது. சல்யூடோ பைக்கும் அதற்க்கு ஈடாகவே உள்ளது. இருந்த பொழுதும் ஹீரோ கிளாமர் சற்றும் கூடுதல் திறனை தருகின்றது.

 எந்த பைக் வாங்கலாம் கிளாமர் அல்லது சல்யூடோ

ஹீரோ கிளாமர் பைக்தான் நம்முடைய சாய்ஸ் கிளாமர் Fi மாடலை தேர்வு செய்வது அவள்ளவு பலனாக இருக்காது. யமஹா சல்யூடோ சந்தைக்கு புதிது என்றாலும் நல்ல பைக் என்பதில் மாற்று கருத்தில்லை.

ஹீரோ கிளாமர் பைக் விலை

  • கிளாமர் டிரம் – ரூ.55,925
  • கிளாமர் டிஸ்க் – ரூ. 57,925

யமஹா சல்யூடோ

  • சல்யூடோ டிரம் – ரூ. 52,000
  • சல்யூடோ டிஸ்க் – ரூ. 54,500
{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை }

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி ; தொடர்பு

Exit mobile version