எந்த ஸ்கூட்டர் வாங்கலாம்

0
பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் ஸ்கூட்டரை பரவலாக விரும்ப ஆரம்பித்து விட்டனர். இந்தியாவில் உள்ள முன்னனி மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள் அனைத்தும் ஸ்கூட்டர்களை விற்று வருகின்றன.
யமாஹா நிறுவனம் முதன்முறையாக இந்தியாவில் ஸ்கூட்டரினை  கடந்த 2012 ஆம் ஆண்டில் களமிறக்கியது. 2012யின் யமாஹா வளர்ச்சில் ரே ஸ்கூட்டர் முக்கிய பங்கு வகித்ததை முன்பே பதிவிட்டிருந்தேன். மேலும் புதிய வெள்ளை வண்ணத்தில் ரே ஸ்கூட்டர் வரவுள்ளது.

வெஸ்பா ப்ரீம்யம் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்ட 8 மாதங்களில் 25,000த்திற்க்கு மேலான வாகனங்களை விற்றள்ளது.மேலும் வெஸ்பா எல்ஸ் 125 சில தினங்களுக்கு முன் விலையை குறைத்தது.

வாசகர் சிவக்குமார் கேட்ட கேள்வி இதுதான்…

qa

1. ஹீரோ மெஸ்டீரோ

ஹீரோ நிறுவனம் டிசம்பர் 2012யின் விற்பனை புள்ளிவிரங்களை அறிவித்தபொழுது மெஸ்டீரோ ஸ்கூட்டர்களுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. 

மெஸ்டீரோ  என்ஜின்

109சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின்.இதன் சக்தி 8.2bhp @ 7500rpm மற்றும் டார்க் 9.1NM @ 5500rpm ஆகும்.
ஆண்களும் பயன்படுத்தும் வகையில் இருப்பது இதனுடய பெரிய ப்ளஸ் ஆகும். மேலும் ஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டரும் மெஸ்டீரோ ஸ்கூட்டரும் ஓரளவுக்கு இரண்டுமே  ஓன்றிப்போகும். 6 வண்ணங்ளில் கிடைக்கிறது. இதனுடைய அதிகப்பட்ச வேகம் 88km/hr. மேலும் பயணிக்கவும் பயன்படுத்தவும் இயல்பாகவே இருக்கும். 

மெஸ்டீரோ மைலேஜ்

நகரம் 42-44kmpl
நெடுஞ்சாலை 60kmpl
விலை;45,500

2. யமாஹா ரே

2016 ஆம் ஆண்டிற்க்குள் 10% ஸ்கூட்டர் மார்க்கெட்டினை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறக்கியுள்ளது. ரே ஸ்கூட்டர் பெண்களை அதிகப்படியாக கவரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது. அதன் நோக்கம் விரைவாக நிறைவேறிவருகிறது.

ரே  என்ஜின்

112சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின்.இதன் சக்தி 7bhp @ 7500rpm மற்றும் டார்க் 8.1NM @ 5500rpm ஆகும்.

பெண்களை அதிகப்படியான கவனத்தில் வைத்து வெளியிட்டுள்ளது. ஆண்களை மையமாக வைத்து ஒரு ஸ்கூட்டர் விரைவில் வெளியாகும்.  . 5 வண்ணங்ளில் கிடைத்த ரே ஸ்கூட்டர் சில நாட்களுக்கு முன்தான் புதிய வெள்ளை வண்ணத்தை அறிமுகப்படுத்தியது. இதனுடைய அதிகப்பட்ச வேகம் 85km/hr. மேலும் பயணிக்கவும் இயல்பாகவே இருக்கும்.

யமாஹா ரே மைலேஜ்

நகரம் 40kmpl
நெடுஞ்சாலை 60kmpl
விலை; 46,000

3. சுசுகி அசெஸ் 125

சுசுகி அசெஸ் 125 ஸ்கூட்டர் மிக அதிகப்படியான விற்பனையாகும் ஸ்கூட்டர்களிலும் இதுவும் ஒன்றாகும்.

அசெஸ் 125   என்ஜின்

124சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின்.இதன் சக்தி 8.58bhp @ 7000rpm மற்றும் டார்க் 9.8NM @ 6500rpm ஆகும்.
இதுனுடைய வேகம் மற்றும் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.
6 வண்ணங்ளில் கிடைத்த ஸ்கூட்டர் அசெஸ் 125 . இதனுடைய அதிகப்பட்ச வேகம் 92km/hr. மேலும் பயணிக்கவும் இயல்பாகவே இருக்கும்.

அசெஸ் 125 மைலேஜ்

நகரம் 42kmpl
நெடுஞ்சாலை 51kmpl
விலை 46,000

4. ஹோன்டா ஆக்டிவா


ஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டர் அதிகப்படியான விற்பனையாகும் ஸ்கூட்டர்.

ஆக்டிவா  என்ஜின்

109சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின்.இதன் சக்தி 8bhp @ 7000rpm மற்றும் டார்க் 9NM @ 6500rpm ஆகும்.
இதுனுடைய வேகம் மற்றும் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.
6 வண்ணங்ளில் கிடைக்கும் . இதனுடைய அதிகப்பட்ச வேகம் 80km/hr.

 ஆக்டிவா மைலேஜ்

நகரம் 40kmpl
நெடுஞ்சாலை 45kmpl
விலை 44,000 முதல் 46,000 வரை

எம்முடைய பரிந்துரை 


1. யமாஹா ரே
2. சுசுகி அசெஸ் 125
3.ஹோன்டா ஆக்டிவா
4. ஹீரோ மெஸ்டீரோ