ஐரோப்பாவில் ராயல் என்ஃபீல்டு கடை திறப்பு

0
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் முதன்முறையாக ஐரோப்பாவில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் இரண்டு தனித்துவமான கடைகளை தொடங்கியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீலடு நிறுவனம் பிரான்ஸ் நாட்டில் 80 டீலர்களையும்,  ஸ்பெயின் நாட்டில் 25 டீலர்களை கொண்டுள்ளது.  பிரான்ஸ்  நாட்டின் தலைநகரம் பாரீஸ் மற்றும் ஸ்பெயின் தலைநகரம் மாட்ரிட் என இரண்டு நகரங்களில்  தொடங்கப்பட்டுள்ளது.

தனித்துவமான் இரண்டு கடைகளிலும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்  துனைகருவிகள் மற்றும் சிறப்பு உடைகளுடன் டெஸ்பேட்ச் ரைடர் சிறப்பு பதிப்பு உடைகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும் படிக்க ; ராயல் என்ஃபீல்டு டெஸ்பேட்ச் ரைடர் விபரம்

இதுகுறித்து நிறுவன சர்வதேச வர்த்தக பிரிவு தலைவர் அருன் கோபால் கூறுகையில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் என இரண்டு நாடுகளுமே ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனையில் சிறப்பான செயல்பாட்டினை தந்துள்ளதால் இது வெறும் கடை திறப்பாக மட்டும் இல்லாமல் விற்பனைக்கு பின் சிறப்பான சேவை மற்றும்  அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ராயல் என்ஃபீல்டு மாட்ரிட்
ராயல் என்ஃபீல்டு மாட்ரிட்

ராயல் என்ஃபீல்டு பாரீஸ்
ராயல் என்ஃபீல்டு பாரீஸ்

Royal Enfield opened two new exclusive stores in France and Spain